இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: வெளிச்சத்துக்கு வந்தது டிரம்பின் இரட்டை வேடம்!!

இந்தியா அமெரிக்கா இடையே கிட்டதட்ட 10 மாதங்களுக்கும் மேலாக வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.ஆனால் இதுவரை இந்த பேச்சு வார்த்தையில் ஒரு முடிவு கிடைக்கவில்லை, ஒப்பந்தமும் கையெழுத்து ஆகவில்லை.

கடந்த ஆண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், பல்வேறு நாடுகளும் அமெரிக்க பொருட்களுக்கு அதிகபட்ச வரியை விதிப்பதாக கூறினார். இதற்காக போட்டி வரி விதிப்பதாக அறிவித்தார். இதனை அடுத்து பல்வேறு நாடுகளும் போட்டி போட்டு கொண்டு அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்தன. இந்நிலையில் கடந்த ஆண்டு டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 25% வரியை விதித்தார். பின்னர் இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறிப்பிட்டு கூடுதலாக 25% என மொத்தம் 50% வரி விதித்தார்.

இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: வெளிச்சத்துக்கு வந்தது டிரம்பின் இரட்டை வேடம்!!

இந்த வரி விதிப்பு இந்தியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஏற்றுமதியாளர்களையும் அவர்களை சார்ந்து இருக்கக்கூடிய லட்சக்கணக்கான தொழிலாளர்களையும் பெருமளவு பாதிப்படையச் செய்திருக்கிறது. எப்போது இந்தியாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும், இந்த வரி விதிப்பு குறையும் என இவர்கள் காத்திருக்கின்றனர்.

இரு நாட்டு வர்த்தக ஒப்பந்தம் நிலுவையில் இருப்பதால் இந்திய பங்குச்சந்தையும் சரிவிலேயே இருந்துவருகிறது. வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் போது பங்குச்சந்தை மீண்டு வரும் வாய்ப்புள்ளது. இந்த சூழலில் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதை அமெரிக்க அதிபர் டிரம்ப் தடுத்ததாக அவருடைய சொந்தக் கட்சியான குடியரசு கட்சியின் எம்பி குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: வெளிச்சத்துக்கு வந்தது டிரம்பின் இரட்டை வேடம்!!

டிரம்பின் குடியரசு கட்சியை சேர்ந்த டெக்சாஸ் மாகாண எம்பியான டெட் குரூஸ் பேசியதாக ஒரு பத்து நிமிட ஆடியோ வெளியாகியிருக்கிறது. அது இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தங்கள் செய்வது தொடர்பாக கடந்த ஆண்டு பேசப்பட்ட ஆடியோ என சொல்லப்படுகிறது. அந்த காலகட்டத்தில் கட்சியின் தனியார் நன்கொடையாளர்களுடன் டெட் குரூஸ் பேசியுள்ளார். அப்படி அவர் பேசிய 10 நிமிட ஆடியோ தான் தற்போது வெளியாகி இருக்கிறது.

அதில் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், வெள்ளை மாளிகை ஆலோசகர் பீட்டர் நவேரா ஆகியோரும் சில சமயங்களில் அதிபர் டிரம்பும் சேர்ந்து இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை தடுத்துவிட்டதாக கூறியிருக்கிறார். இந்த ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தால் இரு நாடுகளுக்கும் பெரிய பலன் கிடைத்திருக்கும் எனவும், ஆனால் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், ஆலோசகர் பீட்டர் நவேரா, அதிபர் டிரம்ப் போன்றவர்களின் எதிர்ப்பால் தடைப்பட்டு விட்டதாகவும் அதில் அவர் தெரிவித்திருக்கிறார்.

ஒருபுறம் டிரம்ப் இந்தியா சிறந்த நட்பு நாடு, மோடி சிறந்த நண்பர் , விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என தொடர்ச்சியாக கூறி வருகிறார், ஆனால் உண்மையில் அவரே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதை தடுத்திருக்கிறார் என கூறப்படுவது விவாதத்தை எழுப்புகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+