அரசு வேலையை விடுத்து மீன் வளர்ப்பில் கோடிகளை அள்ளும் இளைஞன்.. எல்லோருக்கும் சாத்தியமா..?

அசாம் மாநிலத்தின் பிஸ்வாநாத் சைராலி பகுதியை சேர்ந்தவர் தான் அனுப் குமார் சர்மா. 2002 ஆம் ஆண்டு கவுஹாத்தி பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் சிஎஸ்ஐஆர் அமைப்பில் துணை ஆய்வாளராக பணிக்கு சேர்ந்தார். தொடர்ந்து அரசு சாரா அமைப்பின் சேர்ந்து 15 ஆண்டு காலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்து மக்கள் நல பணியில் ஈடுபட்டார்.

அப்போது தான் அவருக்கு அசாம் மாநில மக்கள் மீனுக்காக வெளிமாநிலங்களையே சார்ந்திருப்பது தெரிய வந்தது. எனவே தன்னுடைய வேலையை விடுத்து சொந்த மாநிலமான அஸ்ஸாமுக்கு திரும்பி மீன் வளர்ப்புக்கான ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

அரசு வேலையை விடுத்து மீன் வளர்ப்பில் கோடிகளை அள்ளும் இளைஞன்.. எல்லோருக்கும் சாத்தியமா..?

தனக்கு சொந்தமாக இருக்கும் 10 ஏக்கர் நிலத்தில் மீன் வளர்ப்பில் ஈடுபடலாம் என முடிவு செய்தார். தற்போது அவர் 100 ஏக்கர் பரப்பளவில் மீன் வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார். கெளுத்தி, கொய் உள்ளிட்ட மீன்களை அதிகம் வளர்த்து விற்பனை செய்கிறார்.

அசாம் மாநிலம் அதிக அளவு மழைப்பொழிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படக்கூடிய ஒரு மாநிலம். இந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீனுக்காக பல காலமாக ஆந்திர மாநிலத்தை தான் சார்ந்திருக்கின்றனர்.

இந்த நிலையில் தான் அனுப் சர்மாவின் இந்த மீன் வளர்ப்பு முறை அசாம் மாநிலத்தில் மிகப்பெரிய வெற்றியை கண்டிருக்கிறது. குறிப்பாக அசாம் மாநில மக்கள் பலரும் ஆர்வத்துடன் இவரிடம் மீன்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்.

மீன் வளர்ப்பில் மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது இளம் நிலையில் வளர்ச்சி அடையக்கூடிய மீன் குஞ்சுகளை வாங்கி வந்து நீர்நிலைகளில் விட்டு வளர்ப்பதற்கு அதிக செலவு செய்ய வேண்டியிருந்தது. இதனை உணர்ந்து கொண்ட அனுப் சர்மா தானே சொந்தமாக இது போன்ற மீன் குஞ்சுகளை வளர்க்கும் பணியையும் தொடங்கினார். ஆண்டுக்கு 200 டன்கள் இதுபோன்ற மீன் குஞ்சுகளை வளர்ப்பதாக கூறுகிறார்.

தன்னுடைய மீன் வளர்ப்பு தொழிலுக்கு இதனை பயன்படுத்துவதோடு மட்டுமில்லாமல் மீன் வளர்ப்பில் ஆர்வம் உள்ள பலருக்கும் இதனை விற்பனை செய்வதாக அவர் தெரிவிக்கிறார். அவருடைய இந்த மீன் வளர்ப்பு தொழில் வெற்றி பெறுவதற்கு இந்த உத்தி மிகப்பெரிய அளவில் உதவியாக இருந்திருக்கிறது. தன்னை சுற்றி இருக்கும் பல்வேறு விவசாயிகளையும் தொடர்பு கொண்டு அவர்களுக்கு மீன் வளர்ப்பு குறித்த பயிற்சி வழங்கி வருவதாக அவர் தெரிவிக்கிறார்.

கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் 300 விவசாயிகளுக்கு இலவசமாக மீன் வளர்ப்பு பயிற்சி வழங்கியிருப்பதாக தெரிவித்திருக்கிறார். 2000 தனி நபர்கள் இவரிடம் மீன் வளர்ப்புக்கான பயிற்சி பெற்று இருக்கிறார்கள். தற்போது இவர் 100 டன்கள் மீன்களை உற்பத்தி செய்கிறார் மேலும் இந்த மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்வதன் மூலம் மட்டும் ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறார். ஒட்டுமொத்தமாக இவருடைய மீன் வளர்ப்பு தொழில் 3 கோடி ரூபாய் வருமானம் தருகிறதாம்.

இளைஞர்கள் இந்த காலத்தில் விவசாயம் ,மீன் வளர்ப்பு உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டால் நிச்சயம் நல்ல லாபம் காண முடியும் என அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார். தன்னை தொடர்பு கொள்பவர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கு தயாராக இருக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+