ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா மார்ச் 10, 2023 அன்று 17 வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் (NBFCs), பதிவு சான்றிதழ் (CoR) ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
17 வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் ரிசர்வ் வங்கி வழங்கிய 17 பதிவு சான்றிதழை ஒப்படைத்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934ன் பிரிவு 45IA (6) இன் கீழ் தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்துவதில் நிதி நிறுவனங்களின் பதிவு சான்றிதழ்களை ரத்து செய்துள்ளதாக இந்திய மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
பதிவு சான்றிதழ்கள் ரத்து
தன்பாத் பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட், சூர்யா வனிஜ்யா & இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட், ஜெய்னெக்ஸ் இந்தியா லிமிடெட், ஜெயம் வணிகம் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஜேஎம் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட சில நிதி நிறுவனங்களின் பதிவு சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 3 நிறுவனங்கள்
கடந்த ஆண்டு டிசம்பர் 13 அன்றே 3 வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் தங்களின் பதிவு சான்றிதழ்களை ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைத்தன.
இந்த பட்டியலில் ஸ்மார்ட் வேல்யூ ஈக்விசர்ச் ஆனது வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் வணிகத்தில் இருந்து வெளியேறியுள்ளது.
எதற்காக ரத்து?
இதேபோல புதிய ஹோல்டிங் அன்ட் டிரேடிங் நிறுவனம் மற்றும் மான்சா டீலர் ஆகியவை ஒன்றிணைத்தல்,இணைத்தல், கலைத்தல் என பல காரணிகளின் மத்தியில் இந்த நிதி நிறுவனங்களின் உரிமங்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கடும் நடவடிக்கை
தொடர்ந்து வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் ரிசர்வ் வங்கி, சமீபத்திய ஆண்டுகளாகவே வங்கிகள் மீதும், நிதி நிறுவனங்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு அமேசான் நிறுவனத்தின் அமேசான் பேவுக்கு கணிசமான தொகையினை அபராதமாகவும் விதித்தது. இது கேஓய்சி விதி மீறல் உள்ளிட்ட சில விதிமுறைகளுக்கு மத்தியில் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடந்த ஆண்டு சில ஆண்டுகளாகவே சில வங்கிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications