இந்திய ரிசர்வ் வங்கி இந்திய நிதி துறையை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என்பது மட்டும் அல்லாமல் மக்களுக்கு இந்திய நிதி துறை மீதான நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற முக்கிய எண்ணமும் உண்டு. இதை அடையும் வகையில் ரிசர்வ் வங்கி 100 நாட்கள் திட்டம் ஜூன் 1 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது.
மத்திய அரசின் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழ் மகாத்மா காந்தி பெயரில் 100 நாள் வேலை திட்டம் இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படுவது அனைவருக்கும் தெரியும். ஆனால் ரிசர்வ் வங்கி செயல்படுத்துவது முற்றிலும் மாறுபட்ட திட்டம்.

மே 12 அன்று, நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஒவ்வொரு வங்கியிலும் டாப் '100 உரிமை கோரப்படாத வைப்புத் தொகைகளை' '100 நாட்களுக்குள்' கண்டறிந்து செட்டில் செய்வதற்கு வங்கிகளுக்கு '100 நாட்கள் 100 செலுத்தும்' (100 Days 100 Pays) திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிவித்தது.
இந்த பிரச்சாரத்தின் கீழ், வங்கிகள் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஒவ்வொரு வங்கியிலும் உரிமை கோரப்படாத டாப் 100 டெபாசிட்களை 100 நாட்களுக்குள் கண்டறிந்து செட்டில் செய்யும். இதன் மூலம் வங்கிகள் யார் வீட்டை வேண்டுமானாலும் தட்டி உங்களுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுக்கலாம்.
இந்திய ரிசர்வ் வங்கியின் 100 Days 100 Pays நடவடிக்கையானது, வங்கி அமைப்பில் கோரப்படாத வைப்புத் தொகையின் அளவைக் குறைப்பதற்கும், அத்தகைய வைப்புத் தொகைகளை அவற்றின் உண்மையான உரிமையாளர்கள் / உரிமையாளர்களுக்குத் திருப்பித் தருவதற்கும் ரிசர்வ் வங்கியின் தற்போதைய முயற்சிகள் பெரிய அளவில் பலன் அளிக்கும்.
உரிமை கோரப்படாத வைப்புத் தொகை என்றால் என்ன..? பொதுவாக வங்கிகளில் டெபாசிட் செய்தவர்கள் அதை திரும்ப பெற மறந்து பல காலமாக வங்கியில் தேங்கியிருந்து அது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு ஆர்பிஐ கணக்கிற்கு மாற்றப்படும். இந்த தொகைக்கு வட்டி ஏதும் கிடைக்காது.
ஆனால் இப்படி உரிமை கோரப்படாத வைப்புத் தொகை அளவு மட்டும் பிப்ரவரி மாத கணக்கின் படி பொதுத்துறை வங்கிகள் சுமார் 35,012 கோடி ரூபாய் தொகையை ஆர்பிஐ கணக்கிற்கு மாற்றியுள்ளது. இது கிட்டத்தட்ட 4.5 பில்லியன் டாலர், இதை உரிய நபரிடம் சேர்க்கும் போது அவர்களின் வாழ்க்கை மேம்படுவது மட்டும் அல்லாமல் சந்தையில் புதிய முதலீடுகள் வரும்.


Click it and Unblock the Notifications