ஒவ்வொரு நாட்டிலும் அதன் வங்கிகள், நிதி நிறுவனங்கள் பெரும்பாலும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. அந்த வகையில் நாட்டில் ஏராளமான வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் உள்ளன. இதில் வங்கிகளின் செயல்பாடுகள், நம்பகத்தன்மை அதிகரிக்கும்போது அவற்றின் மீதான வளர்ச்சி ஏற்படும். அதேபோல், வங்கிகளில் எவ்வாறு வாடிக்கையாளர்களை நடத்துகின்றன போன்றவற்றை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து அவற்றில் எந்த வங்கிகள் பாதுகாப்பானது என்ற பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

D-SIBS பட்டியல் என்பது மிக முக்கியமான உள்நாட்டு அமைப்புக்கு மிகவும் முக்கியமானதாகவும், நாட்டின் பாதுகாப்பான வங்கிகளாகவும் இது கருதப்படுகிறது. இந்த வங்கிகள் இந்த அமைப்புக்கு மிகவும் முக்கியமானவை. அவற்றின் சரிவு முழு பொருளாதாரத்தையும் சீரழித்துவிடும். எனவேதான் இந்த முக்கிய வங்கிகளுக்கு ஏதேனும் ஏற்படும்பட்சத்தில் நாட்டின் அரசாங்கமே அவைகளை காப்பாற்ற தேவையானவற்றை செய்யும்.
பொருளாதாரத்தில் அடிப்படையாக கொண்ட இந்த மதிப்பீட்டின்படி, இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் தனியார் துறையை சேர்ந்த எச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் 2024ஆம் ஆண்டில் பாதுகாப்பான வங்கிகளாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.இந்த மூன்று வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கியால் உள்நாட்டு அமைப்பு ரீதியாக முக்கியமான வங்கிகளாக (D-SIBs) அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி, உள்நாட்டு அமைப்பிற்கான குறிப்பிடத்தக்க வங்கிகளின் பட்டியலை முதன்முதலில் 2014ஆம் ஆண்டில் தயாரித்தது. அந்த வகையில், 2015ஆம் ஆண்டில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் 2016இல், ஐசிஐசிஐ வங்கி மற்றும் HDFC வங்கி 2017இல் பட்டியலில் அடுத்தடுத்து இடம்பெற்றது.
மார்ச் 31, 2024 வரை உள்ள பட்டியலின்படி, டி-எஸ்ஐபிஎஸ் வங்கிகளின் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி தயாரித்துள்ளது வெளியிட்டுள்ளது. அதில், உள்நாட்டு அமைப்புக்கு முக்கியமானதாக அறிவிக்கப்பட்ட வங்கிகள் காமன் ஈக்விட்டி டயர் 1 (CET1) மூலதனம் எனப்படும் கூடுதல் நிதியையும் பராமரிக்க வேண்டும். இதில், இழப்பு அல்லது ஆபத்தைத் தவிர்க்க இந்த மூலதனம் அவசியம். இந்த கூடுதல் மூலதனத்தின் அளவு ரிசர்வ் வங்கியின் பட்டியலில் உள்ள வங்கிக்கு ஏற்ப மாறுபடும்.
காமன் ஈக்விட்டி டயர் 1 அடிப்படையில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவை பக்கெட்-4ல் ரிசர்வ் வங்கி வைத்துள்ளது. இதன் கீழ் 0.80 சதவீதம் கூடுதல் CET1ஐ வரும் காலங்களில் பராமரிக்க வேண்டும். அதேபோல், எச்டிஎஃப்சி வங்கியும் பக்கெட் 2இல் வைத்துள்ளது.வரும் காலத்தில் இதன் கீழ் 0.40 சதவிகிதம் கூடுதல் CET1ஐ பராமரிக்க வேண்டும் மற்றும் ICICI வங்கி பக்கெட் 1இல் வைக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் 0.20 சதவிகிதம் கூடுதல் CET1ஐ பராமரிக்க வேண்டும். இதனடிப்படையில், இந்த மூன்று வங்கிகளும் தங்களது மூலதனத்தை அதிகரிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த புதிய விதிகள் 1 ஏப்ரல் 2025 முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications