அதிகரித்து வரும் வங்கி மோசடிகள்.. ஆர்பிஐ எடுத்த அதிரடி முடிவு.. அப்படி என்ன செய்தது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: நாளுக்கு நாள் வங்கிகளில் மோசடி எண்ணிக்கை அதிகரித்து வரும் அதே நேரத்தில், ரிசர்வ் வங்கியும் தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும் இன்றளவிலும் மோசடிகள் குறைந்தபாடாகவே இல்லை.

 

அதை நிரூபிக்கும் விதமாகவே அடுத்தடுத்த மோசடிகள் அம்பலமாகி வருகின்றன. முன்னதாக பிஎம்சி வங்கியில் நடந்த மோசடிகள் இன்னும் மக்கள் மனதில் மறையாத நிலையில், தற்போது அடுத்தடுத்த சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

பெங்களூருவைச் சேர்ந்த ஸ்ரீ குரு ராகவேந்திரா சஹாரா என்ற தனியார் வங்கியின் மேல் வந்த புகாரால் தற்போது அந்த வங்கியின் மீது தடை விதித்துள்ளது ஆர்பிஐ.

ஸ்ரீ குரு ராகவேந்திரா சஹாராவுக்கு எச்சரிக்கை

ஸ்ரீ குரு ராகவேந்திரா சஹாராவுக்கு எச்சரிக்கை

மத்திய வங்கி தொடர்ந்து என்ன தான் நடவடிக்கை தொடர்ந்து எடுத்து வந்தாலும், மோசடிகளும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இந்த நிலையில் ஸ்ரீ குரு ராகவேந்திரா சஹாரா வங்கி அடுத்த ஆறு மாதங்களுக்கு புதியதாக எந்தவொரு டெபாசிட்டுகளையும் பெறக் கூடாது. அதே போல் வாடிக்கையாளர் பெரிய அளவிலான தொகையினை எடுக்கவோ அனுமதிக்க கூடாது என்றும் எச்சரித்துள்ளது.

கடன் வழங்க கூடாது.

கடன் வழங்க கூடாது.

புதியதாக பணத்தை பெறவும் கூடாது. அதே போல் புதியதாக பணத்தை கொடுக்கவும் கூடாது என்றும் (கடன் கொடுக்க கூடாது) ஆர்பிஐ தெரிவித்துள்ளது. ஆக மொத்தம் அடுத்த ஆறு மாதங்களுக்கு ஸ்ரீ குரு ராகவேந்திரா சஹாரா வங்கி எந்தவொரு வங்கி நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்றும் ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது.

அதிரடி நடவடிக்கை
 

அதிரடி நடவடிக்கை

இந்த நடவடிக்கையானது 1949ம் ஆண்டு வங்கி ஒழுங்குமுறை சட்டம் 35ஏ மற்றும் 56 பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மத்திய வங்கியின் தலைமை பொது மேலாளர் யோகேஷ் தயால் தெரிவித்துள்ளார். என்ன தான் மத்திய வங்கி தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தாலும் மோசடிகள் இன்னும் நீண்டு கொண்டே இருக்கின்றன. ஆக இன்னும் மத்திய வங்கி கடினமான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

பெரிய அளவில் பணம் எடுக்க தடை

பெரிய அளவில் பணம் எடுக்க தடை

ஏற்கனவே பிஎம்சி வங்கியால் அடிவாங்கிய ஆர்பிஐ, தற்போது ஸ்ரீ குரு ராகவேந்திரா சஹாரா வங்கி விஷயத்தில் தற்போது சற்று தெளிவான முடிவை எடுத்துள்ளது. சஹாரா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கு வைத்துள்ளவர்களுக்கு அடுத்த ஆறு மாதத்திற்கு 35,000 ரூபாய்க்கு கொடுக்க கூடாது என தடை வித்துள்ளது.

நம்பிக்கை இழப்பு

நம்பிக்கை இழப்பு

தொடர்ந்து இவ்வாறு அதிகரித்து வரும் பிரச்சனைகளால் மக்கள் வங்கிகளின் மீதுள்ள நம்பிக்கையை இழந்து வருகின்றனர். அதிலும் தங்களது சொந்த பணம் கையிலிருந்தும் அவசர தேவைக்கு எடுத்து பயன்படுத்த முடியாமல் பிஎம்சி வங்கியில் டெபாசிட் செய்திருந்த சிலர் தற்கொலை செய்து கொண்டது, சிலர் இதனாலேயே மனம் உடைந்து இறந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆக இதையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கருதப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: rbi ஆர்பிஐ
English summary

Reserve bank of India curbed Sri guru ragahavendra sahakara bank from doing business

Reserve bank of india curbed Sri guru ragahavendra sahakara bank from doing business. And RBI allowed the bank's savings and current account customers and depositors to withdraw cash up to Rs.35,000 only till further notice.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X