இந்தியாவில் வங்கி நிர்வாகம் மற்றும் கட்டமைப்பில் தொடர்ந்து அதிகளவிலான கண்காணிப்பு செய்து வரும் ரிசர்வ் வங்கி ஒவ்வொரு வங்கியின் கணக்கு, இயக்கும் முறை, கட்டுப்பாடுகளை முழுமையாக வங்கிகள் கடைப்பிடிக்கிறதா என்று ஆய்வு செய்து வருகிறது.
இந்நிலையில் விதிமுறைகளை மீறிய சுமார் 14 வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது. ஆர்பிஐ வரலாற்றிலேயே ஒரே நாளில் அதிகப்படியான வங்கிகளுக்கு அபராதம் விதித்து இது தான்.
14 வங்கிகளுக்கு ஆர்பிஐ அபராதம்
பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், கூட்டறவு வங்கிகள், ஸ்மால் பைனான்ஸ் வங்கி பிரிவுகளில் இருக்கும் சுமார் 14 வங்கிகளுக்கு தற்போது ஆர்பிஐ அபராதம் விதித்துள்ளது.
முறைகேடுகள், விதிமீறல்
என்பிஎப்சி-க்கு கடன் கொடுத்தல், என்பிஎப்சி-க்கான பேங்க் பைனான்ஸ், கடன் மற்றும் அட்வான்சஸ் பிரிவில் செய்த முறைகேடுகள், விதிமீறல் செய்த காரணத்திற்காக பந்தன் வங்கி, பாங்க் ஆப் பரோடா, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா என 14 வங்கிகளுக்கு பணமாக அபராதம் விதிக்கப்பட்டது.
திவான் ஹவுசிங் பைனான்ஸ் கார்ப்பரேஷன்
இதில் பெரும் பகுதி முறைகேடுகள் திவான் ஹவுசிங் பைனான்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் அதன் துணை நிறுவன கணக்குகள் தொடர்புடையதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பந்தன் வங்கி, பாங்க் ஆப் பரோடா, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆகியவற்றை தொடர்ந்து பாங்க் ஆப் மகாராஷ்டிரா, சென்டரல் பேங்க் ஆப் இந்தியா, கிரெடிட் சூசி, இந்தியன் பேங்க், இண்ட்ஸ்இந்த் வங்கி, கர்நாடகா வங்கி, கரூர் வைசியா வங்கி, பஞ்சாப் அன்ட் சிந்த் வங்கி, சௌத் இந்தின் பேங்க், தி ஜம்மு அண்ட் கஷ்மீர் வங்கி, உட்கராஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி ஆகியவற்றுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
14 வங்கிகள் பட்டியல்

Click it and Unblock the Notifications