ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வரவிருக்கும் மத்திய வங்கி கூட்டத்தில் வட்டி விகிதத்தினை அதிகரிக்குமா? என்ற பரவலான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நிபுணர்கள், வட்டி விகிதம் அதிகரிக்காது என்று கணித்துள்ளனர்.
இது பணவீக்க விகிதமானது தொடர்ந்து இரண்டாவது மாதமாக ரிசர்வ் வங்கியின் இலக்கிற்கு கீழாக வந்துள்ளது.
ஆக இந்த முறை வட்டி விகிதம் என்பது அதிகரிக்கப்படாது என நம்புவதாக தெரிவித்துள்ளனர்.
இலக்கிற்கு கீழாக பணவீக்கம்
கடந்த அக்டோபர் - டிசம்பர் மாதத்தில் பணவீக்க விகிதமானது ரிசர்வ் வங்கியின் இலக்குக்கு கீழாக வந்துள்ளது. இதற்கிடையில் வரவிருக்கும் மாதங்களிலும் இந்த போக்கு தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் காரணமாக மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரிக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பணவீக்கம் சரிவு
தற்போது சர்வதேச அளவில் பல நாடுகளும் சரிவினைக் கண்டு வந்தாலும், இந்திய சந்தையானது தொடர்ந்து மீண்டு வந்து கொண்டுள்ளது. இதற்கிடையில் பணவீக்கமும் குறையத் தொடங்கியுள்ளது. இது மேற்கொண்டு பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமாக அமையலாம். இதற்கிடையில் வரவிருக்கும் மத்திய கூட்டத்தில் வட்டி விகிதத்தினை அதிகரிக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
சராசரி நுகர்வோர் விலை குறியீடு
இதற்கிடையில் சராசரி நுகர்வோர் விலை குறித்த குறியீடானது 6.1% ஆக இருந்தது. இதனை மத்திய வங்கியானது 6.6% ஆக கணித்துள்ளது. இது 4வது காலாண்டில் இன்னும் கணிசமான விகிதத்தினை எட்டலாம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதுவே 2024ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இன்னும் திருத்தம் இருக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
சில்லறை பணவீக்கம்
இதே தொழில் துறை வளர்ச்சி குறித்தான தரவும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் 1.3% ஆக இருந்தது. ஆக இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
இதே சில்லறை பணவீக்க விகிதமும் கடந்த டிசம்பரில் ஒரு வருடத்தில் இல்லாத அளவுக்கு, 5.72% ஆக குறைந்துள்ளது. இது மேற்கொண்டு ரிசர்வ் வங்கியின் இலக்கிற்கு கீழாக வந்துள்ளது. ஆக ஒட்டுமொத்த பணவீக்க விகிதமும் தொடர்ந்து கீழாகவே காணப்படுகின்றது.
விலை குறைவு
குறிப்பாக உணவு மற்றும் எரிபொருள் என பல முக்கிய பணவீக்கமும் சற்று குறையத் தொடங்கியுள்ள நிலையில், இதுவும் மத்திய வங்கியின் முடிவில் எதிரொலிக்கலாம். கடந்த மே 2022ல் இருந்து ஆர்பிஐ 225 அடிப்படை புள்ளிகள் வட்டியினை அதிகரித்தது. இதே அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி 425 அடிப்படை புள்ளிகள் வட்டியினை அதிகரித்தது.
பொருளாதார வளர்ச்சி
நடப்பு ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் என்பது 7% ஆக வளர்ச்சி காணலாம் என புள்ளியியல் அமைச்சகம் எதிர்பார்க்கிறது. இதே மத்திய வங்கியானது 6.8% ஆக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கிறது. மொத்தத்தில் இந்திய பொருளாதாரம் என்பது வளர்ச்சி பாதையில் இருக்கலாம் என பெரும்பாலான நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.


Click it and Unblock the Notifications