24 மணிநேரத்தில் குட்நியூஸ்.. உங்க வீட்டுக் கடனுக்கான வரி குறையப்போகுது..?!

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டம் நேற்று தொடங்கியது. பொதுவாக, ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டத்தில், முக்கிய கடனுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) தொடர்பான முடிவு உள்ளிட்ட முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும். இதனால் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது என்றாலே அது அனைவரது கவனத்தையும் ஈர்த்து விடும். வரும் வெள்ளிக்கிழமையன்று காலை 10 மணிக்கு இந்த கூட்டத்தில் எடுத்த முடிவுகள் குறித்து அறிவிப்பு வெளியாகும்.

இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில், இந்த காலண்டர் ஆண்டின் முதல் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டம் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் கடனுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்படும் என பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

24 மணிநேரத்தில் குட்நியூஸ்.. உங்க வீட்டுக் கடனுக்கான வரி குறையப்போகுது..?!

ரெப்ரோ ரேட்டை 6.50 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக ரிசர்வ் வங்கி குறைக்கும் என்று நம்பப்படுகிறது. ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்தால், வங்கிகளும் வட்டி குறைப்பு பலனை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். அதாவது வங்கிகளும் கடனுக்கான வட்டியை குறைக்கும். இதனால் வாடிக்கையாளர்களின் வீட்டுக் கடன், வாகன கடனுக்கான தவணை தொகை குறையும்.

இதற்கு முன் கடைசியாக 2020 மே மாதம் ரிசர்வ் வங்கி முக்கிய கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்தது. அதன் பிறகு இதுவரை வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்கவில்லை. சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த நிதிக்கொள்கை குழு கூட்டத்தில் கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது மட்டும் ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பை ஏன் செய்ய வேண்டும் என்றால், தற்போது பணவீக்கம் குறைய தொடங்கியுள்ளது. இதனால் ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு செய்ய இது சரியான தருணம். அடுத்ததாக, பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பேங்க் ஆஃப் பரோடாவின் தலைமை பொருளாதார நிபுணர் மதன் சப்னாவிஸ் கூறுகையில், வளர்ச்சியை ஊக்குவிக்க பட்ஜெட் சிறப்பாக செயல்பட்டதால், ரெப்போ விகித குறைப்பு விரைவில் சாத்தியமாகும் என்று நாங்கள் நம்புகிறோம். பணவீக்கம் குறையும் என்ற எதிர்பார்ப்புடன், வட்டி குறைப்பு செய்ய இது சரியான நேரமாக இருக்கலாம்.

கடந்த வாரம் ரிசர்வ் வங்கி வங்கி அமைப்பில் பணப்புழக்கத்தை மேம்படுத்த, 500 கோடி அன்னிய செலாவணி பரிமாற்றம், ரூ.60,000 கோடி ஒப்பன் மார்க்கெட் செயல்பாடுகள் மற்றும் ரூ.50,000 கோடி மதிப்புள்ள 56 நாள் variable day ரெப்போ விகிதம் ஆகிய நடவடிக்கையை எடுத்தது. இதன் காரணமாக சந்தை நிலைமைகள் மேம்பட்டுள்ளது. இது விகிதங்களை குறைப்பதற்கு ஒரு முன்நிபந்தனையாக தோன்றியது என்று தெரிவித்தார்.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வெளியிட்டுள்ள பொருளாதார அறிக்கையில், 2025 பிப்ரவரி நிதிக் கொள்கை கூட்டத்தில் கடனுக்கான வட்டி 0.25 சதவீதம் குறைக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஒட்டு மொத்தத்தில் இந்த ஆண்டு குறைந்தப்பட்சம் 0.75 சதவீதம் வட்டி குறைக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டை 0.25 சதவீதம் குறைத்தால், ரெப்போ ரேட்டுடன் இணைக்கப்பட்ட இபிஎல்ஆர் அடிப்படையிலான கடனுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறையும். இதனால் கடன் வாங்கியவர்களின் மாதாந்திர தவணைகள் குறையும் என்பதால் அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். எம்சிஎல்ஆர் அடிப்படையிலான கடன்களுக்கான வட்டி விகிதத்தையும் வங்கிகள் குறைக்கலாம்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் கனடா, மெக்சிகோ மற்றும் சீனா மீது வரிகளை விதித்தார். இருப்பினும், கனடா மற்றும் மெக்சிகோ மீதான வரிகள் ஒரு மாதத்திற்கு அமெரிக்கா ஒத்திவைத்துள்ளது. டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கை சர்வதேச அளவில் வர்த்தக போர் குறித்த அச்சத்தை தூண்டின.

இதனால் கடந்த திங்கட்கிழமையன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.87.29க்கு சரிந்தது. இந்த சூழ்நிலையில் ரூபாய் நகர்வுகளை பணப்புழக்கத்துடன் நிர்வகிப்பதுதான் பெரிய புதிரான ஒன்று. ஏனெனில் டாலர்கள் விற்கப்பட்டால், அது பணப்புழக்கத்தை வெளியேற்றும். பண நடவடிக்கைக்காக இப்போது அனைவரின் பார்வையும் ரிசர்வ் வங்கியின் மீது உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+