ரெப்போ விகிதத்தை குறைக்கும் முடிவில் ரிசர்வ் வங்கி இல்லை..!

இந்தியப் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தையை மேம்படுத்த ரிசர்வ் வங்கி பல முறை ரெப்போ விகிதத்தை அதிகளவில் குறைத்த நிலையில், தற்போது வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 15 வருடக் குறைவான வட்டி அளவில் உள்ளது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டின் 2 நாள் நடைபெறும் 6வது இருமாத நாணய கொள்கை கூட்டம் வருகிற டிசம்பர் 2ஆம் தேதி நடக்க உள்ளது.

இந்த முக்கியமான கூட்டத்தில் நாட்டில் நிலவும் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு ரெப்போ விகிதத்தைக் குறைக்கும் முடிவில் ரிசர்வ் வங்கி இல்லை எனத் தகவல் கிடைத்துள்ளது.

பணவீக்கம்

பணவீக்கம்


இந்தியாவில் தற்போது ரீடைல் பணவீக்கத்தின் அளவு 6 சதவீதத்தைத் தாண்டி 7.61 சதவீதமாக இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்தும் முடிவில் வர்த்தக மற்றும் பொருளாதாரத்தை நிலையிலான வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லும் பொருட்டு வட்டி விகிதத்தைக் குறைக்கும் முடிவில் இருந்து விலகியுள்ளது.

பொருளாதாரம்

பொருளாதாரம்

இதேபோல் நாட்டின் பொருளாதாரம் ஜூன் காலாண்டைத் தொடர்ந்து செப்டம்பர் காலாண்டிலும் எதிர்மறை (மைனஸ்) வளர்ச்சியில் உள்ளது. ஆனாலும் ஒவ்வொரு மாதமும் உற்பத்தி மற்றும் சேவை தொடர் வளர்ச்சியைப் பதிவு செய்து வரும் காரணத்தால், வளர்ச்சி தடைப்படும் காலத்தில் வட்டி குறைப்புத் தேவைப்படும் நேரத்தில் செய்ய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

டிசம்பர் 4

டிசம்பர் 4

டிசம்பர் 2ஆம் தேதி துவங்கும் ரிசர்வ் வங்கியின் 2 நாள் நாணய கொள்கை கூட்டம், டிசம்பர் 4ஆம் தேதி முடிவடைந்து வட்டி விகிதம் குறித்த முடிவுகளை ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டம் அறிவிக்க உள்ளது.

இந்த நாணய கொள்கை கூட்டம் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

பொருளாதார வளர்ச்சி கணிப்புகள்

பொருளாதார வளர்ச்சி கணிப்புகள்

இந்தியப் பொருளாதாரம் ஜூன் காலாண்டில் -23.9 சதவீதமும், செப்டம்பர் காலாண்டில் -7.5 சதவீதமும் அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள நிலையில் ரிசர்வ் வங்கி நடப்பு நிதியாண்டில் முடிவில் பொருளாதார வளர்ச்சி -9.5 சதவீத அளவில் இருக்கும் எனக் கணித்துள்ளது.

நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சி தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் இருக்கும் நிலையில் வட்டி குறைப்புத் தற்போது தேவையில்லை எனத் தெரிகிறது.

 

115 அடிப்படை புள்ளிகள்

115 அடிப்படை புள்ளிகள்

இந்திய ரிசர்வ் வங்கி கொரோனாவால் பாதித்த இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்து பிப்ரவரி மாதம் முதல் சுமார் 115 அடிப்படை புள்ளிகள் அதாவது 1.15 சதவீதம் அளவிலான ரெப்போ விகிதத்தைக் குறைந்துள்ளது.

இதனால் பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தி சேவைப்படும் போது வட்டி விகிதத்தைக் குறைக்க முடிவு செய்துள்ளது ரிசர்வ் வங்கி.

 

ரீடைல் பணவீக்கம்

ரீடைல் பணவீக்கம்

நாட்டின் நுகர்வோர் பணிநீக்கம் அடிப்படையில் கணக்கிடப்பட்ட ரீடைல் பணவீக்கம் கடந்த 9 மாதமாகத் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அக்டோபர் மாதம் அதன் அளவு 7.61 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த அதிரடி உயர்வுக்கு முக்கியக் காரணம் உணவு பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள கடுமையான விலை உயர்வு தான்.

மே 2014ல் நாட்டின் ரீடைல் பணவீக்கத்தின் அளவு 8.33 சதவீதமாக இருந்தது, இதுதான் வரலாற்று உச்ச அளவாகும்.

 

இலக்கு

இலக்கு


ரிசர்வ் வங்கி நாட்டின் ரீடைல் பணவீக்கத்தை 4 சதவீத (+/- 2 சதவீதம்) அளவீட்டில் நிலைநிறுத்த இலக்கு நிர்ணயம் செய்துள்ள நிலையில் உணவு பணவீக்கத்தின் காரணமாக அதன் அளவு இலக்கில் அதிகப்படியான 6 சதவீதத்தைத் தாண்டியுள்ளது.

இதன் காரணமாகத் தற்போது வட்டி விகிதத்தைக் குறைக்கும் முடிவை ரிசர்வ் வங்கி கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முடிவுகளை டிசம்பர் 4ஆம் தேதி தெரியும்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+