சென்னை: ஆன்லைன் டிஜிட்டல் பேமெண்ட் தளங்கள் தற்போது அதிகரித்துவிட்டன. வங்கிகளுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். இது மிகவும் எளிதான செயல்முறையாக இருப்பதால் பயன்படுத்துவதற்கும் எளிதான ஒன்றாக உள்ளது. ஆனால் சில சமயங்களில் UPI பின் நம்பரை பலரும் மறந்து விடும் சூழல் ஏற்படலாம். இது போன்ற சமயங்களில் உங்களுடைய UPI பின் நம்பரை எளிதில் ரீசெட் செய்யலாம். அதன் செயல்முறையை விவரிக்கிறது இந்த பதிவு.
யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) உதவியால் எளிமையாக வங்கிகளுக்கு இடையேயான பண பரிவர்த்தனையை எளிதில் செய்ய முடியும். அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளை செய்யும் பொழுது பணம் பாதுகாப்பாக இருக்குமா? கண்டிப்பாக இருக்கும் உங்களுடைய UPI பின் மூலம் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளை செய்யும் பொழுது உங்களுடைய பணம் பாதுகாப்பாக இருக்கும். அதே சமயம் சைபர் கிரைம்கள் அதிகரித்து வரும் காரணத்தினால், உங்களுடைய பண பரிவர்த்தனை மற்றும் நிதி தகவல்களை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். மேலும் உங்களுடைய UPI பின்னை அடிக்கடி புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். BHIM UPI, Paytm, PhonePe மற்றும் Google Pay போன்ற ஆப்-களில் UPI பின்னை மாற்றுவது சுலபமான ஒன்றாகும்.

நீங்கள் உங்கள் UPI பின்னை மறந்துவிட்டால், எந்த ஒரு பரிவர்த்தனையையும் செய்ய முடியாது. அந்த சமயங்களில் உங்கள் UPI பின்னை ரீசெட் செய்ய வேண்டும்.
உங்கள் UPI பின்னை BHIM UPI அப்ளிகேஷன்-இல் ரீசெட் செய்வதற்கான ஸ்டெப்ஸ்:
ஸ்டெப் 1: உங்கள் மொபைலில் BHIM UPI அப்ளிகேஷன்-ஐ திறக்கவும்.
ஸ்டெப் 2: மெனுவில் உள்ள " பேங்க் அக்கவுண்ட்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 3: அதில் "Reset UPI PIN" என்று கொடுக்கப்பட்டிருக்கும், அதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 4: புதிய UPI பின்னை உருவாக்குவதற்கு டெபிட் கார்டின் கடைசி 6 எண்களையும், அதன் காலாவதி தேதியையும் (Expiry date) என்டர் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 5: சிறிது நேரம் கழித்து, உங்கள் மொபைல் நம்பருக்கு OTP அனுப்பப்படும்.
ஸ்டெப் 6: அதன்பின், உங்களுடைய புதிய UPI பின்னை என்டர் செய்யவும்.
ஸ்டெப் 7: மேலும் ஒரு முறை புதிய UPI பின்னை என்டர் செய்யுமாறு கேட்கும். இந்த செயல்முறையை முடித்தவுடன் உங்களுடைய புதிய UPI பின் அமைக்கப்படும்.
BHIM UPI ஆப்-ஐ பயன்படுத்தி UPI பின்னை RESET செய்வதன் மூலம் உங்களுடைய ஆன்லைன் பரிவர்த்தனைகள் பாதுகாப்பாக இருக்கும். நீங்கள் பேடிஎம், போன் பே, கூகுள் பே அல்லது வேறு எந்த டிஜிட்டல் பேமெண்ட் ஆப்-களை பயன்படுத்தினாலும், மேலே குறிப்பிட்டுள்ள எளிய செயல்முறையை பயன்படுத்தி RESET செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications