2020ல் கொரோனா பாதிப்பு மற்றும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் மூலம் இந்தியாவில் ஹோட்டல் மற்றும் ஹாஸ்பிடாலிட்டி துறை அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டது. ஆனால் தற்போது லாக்டவுன் கட்டுப்பாடுகள் குறைந்துள்ள நிலையிலும், போக்குவரத்து மேம்பட்டு உள்ள நிலையிலும், மக்கள் மத்தியில் கொரோனா பீதி குறைந்து நம்பிக்கை அதிகரித்துள்ளது.
இதனால் ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரென்ட்களில் மக்கள் வருகை அதிகரித்துள்ளது.
ஹோட்டல் மற்றும் ஹாஸ்பிடாலிட்டி துறை
மக்கள் மத்தியில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றத்தின் மூலம் பல மாதங்களாக மிகவும் மோசமான வர்த்தகத்தை எதிர்கொண்ட ஹோட்டல் மற்றும் ஹாஸ்பிடாலிட்டி துறை தற்போது வர்த்தகச் சரிவில் இருந்து மீண்டு வர துவங்கியுள்ளது.
இதுகுறித்து இந்தியாவின் முன்னணி ரெஸ்டாரென்ட் நிறுவனங்கள் கூறுகையில், ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரென்ட்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை செப்டம்பர் மாதத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருகிறது.
ஆன்லைன் வர்த்தகம்
இதேவேளையில் டெலிவரி மற்றும் டேக் அவே ஆர்டர்களின் எண்ணிக்கை மற்றும் வர்த்தகம் தொடர்ந்து குறைந்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால் ஆன்லைன் டெலிவரி மூலமாகவே வர்த்தகம் பாதிக்கப்பட்டு இருந்து நிலையில் தொடர்ந்து இயங்க முடிந்தது எனவும் ரெஸ்டாரென்ட் அமைப்புகள் தெரிவித்துள்ளது.
கொரோனாவுக்கு முந்தை அளவீடு
மேலும் National Restaurant Association of India (NRAI) அமைப்பின் தலைவர் அனுராக் கூறுகையில், டைன்-இன் வர்த்தகம் பெரிய அளவில் உயர்ந்து இருந்தாலும், கொரோனாவுக்கு முந்தைய அளவீட்டை இன்னும் அடையவில்லை. ஆனால் ரெஸ்டரென்ட்க்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருவது நம்பிக்கையை அளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
70 சதவீத வர்த்தகம்
தற்போது சந்தை நிலவரத்தின் படி சராசரியாகக் கொரோனாவுக்கு முந்தைய அளவீட்டில் சுமார் 70 சதவீத வர்த்தகம் திரும்பக் கிடைத்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேபோல் ரெஸ்டாரென்ட்க்கு வரும் மக்கள் temperature செக் செய்வது, QR கோட் பேமெண்ட் ஆகியவற்றைப் பயன்படுத்தத் துவங்கியுள்ளது வர்த்தகத்தை மேலும் எளிமையாக்குகிறது என அனுராக் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications