ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு 4.70 சதவீதமாக குறைந்துள்ளது என மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் CPI எனப்படும் நுகர்வோர் விலைக் குறியீடு 4.70 சதவீதம் வரையில் குறைந்துள்ளது மூலம், நாட்டின் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற ரிசர்வ் வங்கியின் நீண்ட கால முயற்சிகள் பலன் அளித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் பணவீக்கத்தை 4- 6 சதவீதத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காக தான் அடுத்தடுத்து ரெப்போ விகிதத்தை உயர்த்தி வந்தது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் அப்பர் லிமிட் அளவான 6 சதவீதத்திற்கு கீழ் வந்துள்ளது இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
இந்தியாவின் பணவீக்கம் தொடர்ந்து இரண்டாவது மாதமாக ரிசர்வ் வங்கியின் உச்ச வரம்பிற்குள் இருக்கிறது. மார்ச் மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 5.66 சதவீதமாக இருந்தது. இதை தொடர்ந்து ஏப்ரல் மாதமும் 6 சதவீதத்திற்கு கீழ் 4.70 சதவீதமாக பதிவாகி 18 மாத சரிவை பதிவு செய்துள்ளது.
ஏப்ரல் மாதம் நாட்டின் சில்லறை பணவீக்கம் குறைய மிகவும் முக்கியமான காரணம் உணவு பணவீக்கம் குறைந்தது தான். மார்ச் மாதத்தில் 4.79 சதவீதமாக இருந்த நுகர்வோர் உணவு விலைக் குறியீடு ஏப்ரல் மாதத்தில் 3.84 சதவீதமாகக் குறைந்துள்ளது. சில்லறை பணவீக்கத்தில் பெரும் பங்கு உணவும், எரிபொருள்-ம் உள்ளது.

ஏப்ரல் மாதத்தில் கிராமப்புறத்தில் சில்லறை பணவீக்கம் 4.68 சதவீதமாகவும், நகர்ப்புறத்தில் சில்லபறை பணவீக்கம் 4.85 சதவீதமாகவும் உள்ளது. இவ்விரண்டுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் போக்குவரத்தும், எரிபொருள் செலவுகள் தான்.
இந்தியாவில் எரிபொருள் விலை பல மாதங்களாக எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் உள்ளது. இதற்கு ஏதுவாக ரஷ்யாவில் இருந்து அதிகப்படியான கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு தள்ளுபடி விலையில் இறக்குமதி செய்யப்படும் நிலையில் பெட்ரோல், டீசல் விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் உள்ளது.
இந்தியாவின் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில், கடந்த ஆண்டு மே முதல் ரிசர்வ் வங்கி பென்ச்மார்க் வட்டி விகிமான ரெப்போ விகிதத்தை 250 அடிப்படை புள்ளிகள் வரையில் உயர்த்தி தற்போது 6.50 சதவீதமாக உள்ளது. இதன் மூலம் மக்களின் வாங்கிய கடனுக்கு அதிகப்படியான ஈஎம்ஐ தொகையை செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.


Click it and Unblock the Notifications