இந்தியாவின் சில்லரை விலை பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு முன் குறைந்தபட்சமாக 2019 ஜூலையில் சில்லரை விலை பணவீக்கம் 3.15 சதவீதமாக இருந்தது. கடந்த மார்ச் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 3.34 சதவீதமாக குறைந்துள்ளது. 2024 ஏப்ரல் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 4.83 சதவீதமாக இருந்தது.
கடந்த ஏப்ரலில் பணவீக்கம் குறைந்தன் மூலம் தொடர்ந்து 3வது மாதங்களாக சில்லரை பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் நடுத்தர கால சில்லரை விலை பணவீக்க கட்டுப்பாட்டு இலக்கான 4 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது.

மேலும், கடந்த ஏப்ரல் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் நிபுணர்களின் எதிர்பார்ப்புகளை காட்டிலும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 43 பொருளாதார நிபுணர்களை கொண்ட ராய்ட்டர்ஸ் கருத்து கணிப்பு, ஏப்ரலில் இந்தியாவின் பணவீக்கம் 3.27 சதவீதம் என்ற அளவில் இருக்கும் தெரிவித்து இருந்தது. ஆனால் அதனை காட்டிலும் சில்லரை விலை பணவீக்கம் குறைந்துள்ளது.
சில்லரை விலை பணவீக்கத்தில் சுமார் 50 சதவீத பங்களிப்பை கொண்ட உணவு பணவீக்கம், கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.78 சதவீதமாக குறைந்துள்ளது. முந்தைய மார்ச் மாதத்தில் இது 2.69 சதவீதமாக இருந்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் கிராமப்புற பணவீக்கம் 3.25 சதவீதத்திலிருந்து 2.92 சதவீதமாக குறைந்துள்ளது. அதேவேளையில் நகர்ப்புற பணவீக்கம் 3.43 சதவீதத்திலிருந்து 3.36 சதவீதமாக சரிவடைந்துள்ளது.
சில்லரை விலை பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு இலக்கை காட்டிலும் குறைவாக உள்ளது மற்றும் வரும் காலங்களிலும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் ரிசர்வ் வங்கி முக்கிய கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க அதிக வாய்ப்பு உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழுவின் அடுத்த கூட்டம் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டை 0.25 சதவீதம் குறைக்க வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கடந்த மாதம் இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழுவின் முடிவை அறிவிக்கும் போது, உணவு பொருட்களின் விலைகள் குறித்த சாதகமான கண்ணோட்டத்தால் பணவீக்கம் கீழ்நோக்கிய போக்கில் இருக்கிறது 2025-26ம் நிதியாண்டில் பணவீக்கம் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது செலவு அழுத்தங்களுடன் போராடும் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.
இருப்பினும், உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் குறித்து எச்சரிக்கையாக இருப்பதாக ரிசா்வ் வங்கி எச்சரித்தது. இந்திய ரிசர்வ் வங்கி 2025-26ம் நிதியாண்டில் சில்லரை விலை பணவீக்கம் 4 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது. முதல் காலாண்டில் 3.6 சதவீதமாகவும், இரண்டாவது காலாண்டில் 3.9 சதவீதமாகவும், மூன்றாவது காலாண்டில் 3.8 சதவீதமாகவும், நான்காவது காலாண்டில் 4.4 சதவீதமாகவும் சில்லரை பணவீக்கம் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications