வலிமை அடையும் இந்திய பொருளாதாரம்.. பணவீக்க அளவீடுகள் சரிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் உணவுப் பொருட்கள் விலை குறைந்த காரணத்தால் சில்லறை பணவீக்க அளவீடுகள் 5.3 சதவீதம் என்ற 4 மாத சரிவைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் ரிசர்வ் வங்கி அடுத்த சில காலாண்டுகளுக்குத் தனது குறைவான வட்டி விகிதத்தைத் தொடர வாய்ப்புகள் உருவாகியுள்ளது.

 

இந்தியாவில் ஏற்கனவே போதுமான பணப்புழக்கம் இருக்கும் காரணத்தாலும், சில்லறை பணவீக்கம் அளவீடுகள் குறைந்துள்ளதாலும் வட்டி விகிதத்தைக் குறைக்கவோ, அதிகரிக்கவோ வேண்டிய அவசியம் இல்லை.

இந்திய ஐடி துறையில் மல்டி ஷோர் டெலிவரி திட்டம்.. ஊழியர்களுக்கு பாதிப்பா..? உண்மை என்ன..?

சில்லறை பணவீக்கம்

சில்லறை பணவீக்கம்

இந்தியாவில் ஜூலை மாதம் சில்லறை பணவீக்க அளவீடுகள் 5.3 சதவீதம் வரையில் குறைய மிக முக்கியக் காரணம் உணவு பணவீக்கத்தில் ஏற்பட்டு உள்ள மிகப்பெரிய சரிவு தான். ஜூலை மாதத்தில் 4 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 3.11 சதவீதமாகக் குறைந்துள்ளது.

உணவு பணவீக்கம்

உணவு பணவீக்கம்

உணவு பணவீக்கத்தில் பிரிவில் சமையல் எண்ணெய், பருப்பு, முட்டை, மாமிசம் போன்றவற்றின் பணவீக்கம் கணிசமாக உயர்ந்திருந்தாலும், காய்கறி மீதான பணவீக்கம் 11.7 சதவீதம் சரிந்துள்ளது. இது மொத்த உணவு பணவீக்கத்தைக் குறைத்துள்ளது என மத்திய அரசின் கீழ் இயங்கும் புள்ளியியல் துறை அமைப்பு தரவுகளை வெளியிட்டுள்ளது.

4வது காலாண்டுக்குள்
 

4வது காலாண்டுக்குள்

ஆனால் இதே காலகட்டத்தில் எரிபொருள் மீதான பணவீக்கம் 12.95 சதவீதம் அதிகரித்தும், சேவைத் துறை பணவீக்கம் 6.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. தற்போது சூழ்நிலை தொடர்ந்தால் சில்லறை பணவீக்கம் 2021 ஆண்டின் 4வது காலாண்டுக்குள் 5 சதவீதம் அளவீட்டை விடவும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 2020 காலகட்டம்

ஏப்ரல் 2020 காலகட்டம்

ஏப்ரல் 2020ல் சில்லறை பணவீக்கம் 9.9 சதவீதத்தில் இருந்து தற்போது 5.3 சதவீதமாகக் குறைந்துள்ளது, இதேபோல் உணவு பணவீக்கம் இக்காலக்கட்டத்தல் 10.5 சதவீதத்திலிருந்து 3.11 சதவீதமாகக் குறைந்துள்ளது.

மொத்த விலை பணவீக்கம்

மொத்த விலை பணவீக்கம்

இதேபோல் ஆகஸ்ட் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் அளவீடு கணிசமாக உயர்ந்து 11.39 சதவீதத்தைத் தொட்டு உள்ளது. மொத்த விலை பணவீக்கம் உயர மிக முக்கியக் காரணம் உற்பத்தி பொருட்களின் விலையில் ஏற்பட்ட உயர்வு தான். 2 மாதங்களாகக் குறைந்து வந்த மொத்த விலை பணவீக்கம் ஆகஸ்ட் மாதம் 11.16 சதவீதத்தில் இருந்து 11.39 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்திருந்தால் ரிசர்வ் வங்கி பணப்புழக்கத்தைக் குறைக்கவும், விலைவாசியைக் கட்டுப்படுத்தவும் வட்டியை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆனால் தற்போது சில்லறை பணவீக்கம் குறைந்த நிலையிலும், மொத்த விலை பணவீக்கம் கணிசமாக உயர்ந்திருந்தாலும் வட்டியை உயர்த்த வேண்டிய கட்டாயம் இல்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Retail inflation eases to four-month low of 5.3%, WPI inflation rises to 11.39% in Aug

Retail inflation eases to four-month low of 5.3%, WPI inflation rises to 11.39% in Aug
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X