மே மாதம் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் யாரும் எதிர்பார்க்காத வகையில் 25 மாத சரிவுக்கு வந்துள்ளது.
மே மாதம் Retail Inflation 4.25 சதவீதமாக குறைந்துள்ளது என மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய புள்ளியில் அலுவலகம் ஜூன் 12 ஆம் தேதி மாலை அதிகாரப்பூர்வ தரவுகளை வெளியிட்டது.
இதேபோல் இந்தியாவின் தொழிற்துறை உற்பத்தி அளவு ஏப்ரல் மாதத்தில் தடாலடியாக 4.2 சகவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது, இது மார்ச் மாதம் 1.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் பணிவீக்க இலக்கு 4 முதல் 6 சதவீதத்திற்குள் கொண்டு வரவேண்டும் என்பது தான், சில மாதங்களுக்கு முன்பு ரீடைல் பணவீக்கம் 6 சதவீதத்திற்கு மேல் இருந்த வேளையில் ஆர்பிஐ ரெப்போ விகிதத்தை சுமார் 2.5 சதவீதம் வரையில் உயர்த்தியது. ரெப்போ விகிதம் தற்போது பலன் கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை.
மே மாதம் Retail Inflation 4.25 சதவீதமாக குறைந்துள்ளது வியக்க வைக்கும் விஷயமாக மட்டும் அல்லாமல் விலைவாசி உயர்வு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளதை காட்டுகிறது. இதை வைத்து தான் ஆர்பிஐ கடந்த 2 நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை உயர்த்தாமல் பழைய வட்டி விகிதத்தையே அறிவித்தது.
ஏப்ரல் மாதம் சில்லறை பணவீக்கம் 18 மாத சரிவான 4.70 சதவீதமாக குறைந்தது, மார்ச் மாதத்தில் இது 5.66 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. சில்லறை பணவீக்கத்தில் முக்கிய பங்கீட்டை கொண்டுள்ள உணவு பணவீக்கம் 3.84 சதவீதத்தில் 2.91 சதவீதமாக மே மாதத்தில் குறைந்துள்ளது.
மேலும் ஊரக பணவீக்கம் ஏப்ரல் மாதம் 4.27 சதவீதத்தில் இருந்து 4.17 சதவீதமாக குறைந்துள்ளது. உணவு பொருட்களின் விலை உயர்வு சில்லறை பணவீக்கத்தை நேரடியாகவும், அதிகமாகவும் பாதிக்கும். இதேபோல் உணவு பொருட்களின் விலை என்பது பருவமழை மற்றும் விளைசல்-யும் சார்ந்து உள்ளது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2022-23 ஆம் நிதியாண்டில் 7.2 சதவீதமாக மதிப்பிட்டுள்ளது மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமைச்சகம். 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் வருடாந்திர அடிப்படையில் 12 சதவீதம் அதிகரித்து 1.57 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது.
இந்தியாவின் உற்பத்தி PMI குறியீடு எப்போதும் இல்லாத வகையில் 31 மாத உயர்வை மே மாதம் எட்டியுள்ளது. ஏப்ரல் மாதம் 57.2 ஆக இருந்து உற்பத்தி PMI குறியீடு மே மாதம் 58.7 ஆக உயர்ந்து உச்சத்தை தொட்டு உள்ளது. இந்தியாவிலும், உலக நாடுகளிலும் தேவை அதிகரித்த காரணத்தால் இந்தியாவின் உற்பத்தி துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
2023 ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 3.75 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டு உயர்ந்து உலகளவில் 5வது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்துள்ளது. இந்தியாவுக்கு கீழ் பிரிட்டன் 3.159 டிரில்லியன் டாலர், பிரான்ஸ் 2.924 டிரில்லியன் டாலர், கனடா 2,089 டிரில்லியன் டாலர், ரஷ்யா 1.840 டிரில்லியன் டாலர், ஆஸ்திரேலியா 1.550 டிரில்லியன் டாலர் உடன் உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications