இந்தியாவின் சில்லறை பணவீக்கம் செப்டம்பர் மாதம் 5.02 சதவீதமாக வருடாந்திர அடிப்படையில் குறைந்துள்ளது. இது ஆகஸ்ட் மாதத்தில் 6.83 சதவீதத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் பணவீக்க அளவுகள் நாட்டின் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை கணக்கிடுவதால் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இன்று மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின் படி CPI என கூறப்படும் சில்லறை பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 5.02 சதவீதமாக குறைந்துள்ளது. மாதாந்திர அடிப்படையில் சில்லறை பணவீக்கம் 1.13 சதவீதம் குறைந்துள்ளது.

செப்டம்பர் மாதத்திற்கான உணவு விலை பணவீக்கத்தில் ஏற்பட்ட சரிவு தான் சில்லறை பணவீக்கம் குறைய முக்கிய காரணமாக இருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் 9.94 சதவீதமாக இருந்த உணவு விலை பணவீக்க செப்டம்பர் மாதத்தில் 6.56 சதவீதமாக குறைந்துள்ளது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற சில்லறை பணவீக்கமும் 5.33 சதவீதம் மற்றும் 4.65 சதவீதமாக குறைந்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் 26.14 சதவீதமாக இருந்த காய்கறிகளின் பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 3.39 சதவீதமாக குறைந்துள்ளது. தானியங்களின் பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 10.95 சதவீதமாக இருந்தது. எரிபொருள் மற்றும் ஒளிப் பிரிவு பணவீக்கம் அளவுகள் -0.11 சதவீதம் ஆக குறைந்து பணவாட்டமாக மாறியது.


Click it and Unblock the Notifications