5.64 சதவீதமாக உயர்ந்தது ரீடைல் பணவீக்கம்..!

உணவு பொருள், எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு மீதான விலை ஏற்றத்தின் காரணமாகத் தொழிற்துறை ஊழியர்களுக்கான மார்ச் மாதம் ரீடைல் பணவீக்கத்தின் அளவு 5.64 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ரீடைல் பணவீக்கம் குறித்துத் தொழிலாளர் அமைச்சகம் கூறுகையில் பிப்ரவரி மாதம் 4.48 சதவீதமாக இருந்த ரீடைல் பணவீக்கம் பெட்ரோல், டீசல் மற்றும் சமையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட அதிகப்படியான உயர்வு மூலம் உணவுப் பொருட்களைப் பெரிய அளவில் பாதித்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில் தான் பிப்ரவரி மாதம் 4.48 சதவீதமாக இருந்து ரீடைல் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 5.64 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் அதாவது மார்ச் 2020ல் கொரோனா உச்சம் அடைந்து நாடு முழுவதும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்ட போது ரீடைல் பணவீக்கத்தின் அளவு 5.50 சதவீதமாக இருந்தது.

 5.64 சதவீதமாக உயர்ந்தது ரீடைல் பணவீக்கம்..!

தற்போது மார்ச் 2020 அளவீட்டையும் கடந்துள்ளது வருத்தமளிக்கும் விஷயமாக உள்ளது. இதேபோல் உணவு பணவீக்கம் 4.64 சதவீதத்திலிருந்து மார்ச் மாதம் 5.36 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் அனைத்து இந்தியத் தொழிற்துறை ஊழியர்களுக்கான நுகர்வோர் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 0.6 புள்ளிகள் உயர்ந்து 119.6 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+