இந்தியாவின் ரீடைல் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் வருடாந்திர அடிப்படையில் 3.65% ஆக உயர்ந்துள்ளது. முந்தைய மாதம் 3.54 என்ற 5 வருட சரிவில் இருந்து ஆகஸ்ட் மாதம் உயர்ந்துள்ளது.
மேலும் மொத்த ரீடைல் பணவீக்கத்தில் 50 சதவீத பங்கீட்டை வகிக்கும் உணவு பணவீக்கம், எதிர்பாராத பருவ மழை நாட்டில் பயிர் விளைச்சலைப் பாதித்து உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தும் என்ற அச்சத்திற்கு மத்தியில், கடந்த மாதம் 5.42% என்ற 13 மாதங்களில் குறைந்தபட்ச அளவில் இருந்து ஆகஸ்ட் மாதத்தில் 5.66% ஆக அதிகரித்தது என்று மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பைப் பார்க்கையில் இந்தியாவின் பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் பணவீக்க வரம்பான 4 சதவீதத்தில் இருந்து ± 2 சதவீத அளவான 2-6% என்ற பிரிவிலேயே உள்ளது. இருப்பினும், ரிசர்வ் வங்கியின் நிலையான 4% இலக்கின் அருகிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து ரூபாய் மதிப்பின் பலவீனமான நிலை மற்றும் பருவமழை தொடர்பான அச்சங்கள் அடுத்த சில மாதங்களுக்குப் பணவீக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் உணவு பணவீக்கத்தின் அளவு 5.66% ஆக இருக்கும் வேளையில், காய்கறிகள் பணவீக்கத்தின் அளவு 10.71% ஆக உள்ளது, இது ஜூலை மாதத்தில் 6.83 சதவீதமாக இருந்தது. பருப்பு மற்றும் தானியங்கள் பணவீக்கத்தின் அளவு முறையே 13% மற்றும் 7.31% ஆக உள்ளது, பழங்கள் பணவீக்கத்தின் அளவு 6.45% ஆக உள்ளது, பால் மற்றும் பால் பொருட்கள் பணவீக்கத்தின் அளவு 2.98% ஆக உள்ளது.
இதை தொடர்ந்து மாமிசம் மற்றும் மீன் மீதான பணவீக்கத்தின் அளவு 4.30% ஆக உள்ளது, முட்டையின் பணவீக்கத்தின் அளவு 7.14% ஆக உள்ளது, எரிபொருள் மற்றும் ஒளி பணவீக்கத்தின் அளவு (-)5.31% ஆக உள்ளது, இது ஜூலை மாதத்தில் -3.66 சதவீதம் என பணவாட்ட நிலையில் இருந்தது. ஆடை மற்றும் காலணி பணவீக்கத்தின் அளவு 2.72% ஆக உள்ளது, வீட்டுவசதி பணவீக்கத்தின் அளவு 2.66% ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications