இந்தியாவின் சில்லறை பணவீக்கம் நவம்பர் 2024 இல் 5% ஆக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது, இது அக்டோபர் மாதத்தின் 6.2% அளவில் குறைந்துள்ளது. இந்த சரிவு போக்கு பணவீக்கத்தில் சாதகமான வளர்ச்சியாக இருந்தாலும், தக்காளி மற்றும் வெங்காயம் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறித்த பிரச்சனைகள் தொடர்ந்து நீடிக்கின்றன.
தக்காளி விலையை பொறுத்தவரை, மொத்த விற்பனை சந்தையில் நவம்பர் 2023 ஐ விட நவம்பர் 2024 இல் இதன் விலை 46% அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது. ஆர்பிஐ தனது 2 மாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளை வெளியிடுவதற்கு முன்பு நவம்பர் 2024 இல் நாட்டின் சில்லறை பணவீக்கம் 5% ஆக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது சாதகமான செய்தியாகவே பார்க்கப்படுகிறது.

பேங்க் ஆப் பரோடா வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, பணவீக்கத்தில் எதிர்பார்க்கப்படும் லேசான குறைவுக்கு தக்காளி மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் விலைகள் கடுமையாக குறைந்ததே காரணம் என்று கூறுகிறது. இந்தப் பொருட்களின் மொத்த விற்பனை விலைகளும் குறையத் தொடங்கியுள்ளன, இது விரைவில் சில்லறை சந்தையிலும் எதிரொலிக்கும் என தெரிவித்துள்ளது.
"நவம்பர் 2024 இல் CPI சுமார் 5% ஆக நிலைத்திருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று பேங்க் ஆப் படோரா வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதம் 5.5% இலிருந்து அக்டோபர் மாதம் 6.2% ஆக உயர்ந்தது, இது உணவு மற்றும் பானங்களில் சில்லறை பணவீக்கம் 9.69% ஆக அதிகரித்ததால் ஏற்பட்டது.
இந்திய ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை குழு (MPC) பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி, நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதற்குமான நாணய கொள்கை முடிவுகளை இன்று வெளியிட உள்ளது. தற்போதைய சந்தை நிலவரத்தின் படி ரெப்போ விகிதம் குறைக்கபடாது, அதேவேளையில் CRR விகிதம் 25-50 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஜூலை-செப்டம்பர் காலாண்டில் நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சி 5.4% ஆக குறைந்துள்ளது, பொருளாதார நடவடிக்கைகளைத் தூண்டுவதற்காக வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்துள்ளன.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications