இந்தியாவின் சில்லறை பணவீக்கம் செப்டம்பர் மாதம் 7.41 சதவீதத்தில் இருந்த நிலையில் அக்டோபர் மாதத்தில் வருடாந்திர அடிப்படையில் 6.77 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இதன் மூலம் தொடர்ந்து 10வது மாதமாக ரிசர்வ் வங்கியின் பணவீக்க இலக்கான 2-6 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது. ஏற்கனவே ஆர்பிஐ 3 காலாண்டுகளாக ஏன் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என மத்திய அரசுக்கு விளக்கம் கொடுத்துள்ளது.
இந்த நிலையில் 10வது மாதமாக ஆர்பிஐ இலக்கை எட்ட முடியாத நிலையில் உள்ளது நாட்டின் சில்லறை விலை பணவீக்கம்.
சில்லறை பணவீக்கம்
இந்தியாவின் சில்லறை பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் 3 மாத குறைவான அளவான 6.77 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில் வல்லரசு நாடான அமெரிக்காவின் சில்லறை பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் 7.7 சதவீத அளவில் உள்ளது. இந்தியாவை ஒப்பிடுகையில் 1 சதவீதம் குறைவு.
சப்ளை செயின் பிரச்சனை
தற்போது உலகளவில் நிலவும் சப்ளை செயின் பிரச்சனை நாட்டின் முக்கியமான உற்பத்தி மற்றும் உணவு பொருட்கள் மீது இருக்கும் காரணத்தால் மட்டுமே தொடர்ந்து இந்திய ரிசர்வ் வங்கியின் 4-6 சதவீத பணவீக்க இலக்கிற்குக் கீழ் உள்ளது. அக்டோபர் மாதத்திற்கான உணவுப் பணவீக்கம் 7.01 சதவீதமாக உள்ளது, கடந்த மாதம் 8.6 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
காய்கறிகள் பணவீக்கம்
காய்கறிகள் மீதான பணவீக்கம் 7.7 சதவீதமாகவும், எரிபொருள் மற்றும் மின்சாரப் பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 10.39 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 9.93 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி
அக்டோபர் மாதத்தில் பணவீக்கம் 7 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கவர்னர் சக்திகாந்த தாஸ் கணித்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அதிகமாகவே இருக்கும் பணவீக்கம் உலக நாடுகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
மொத்த விலைக் பணவீக்கம்
இந்தியாவின் மொத்த விலைக் பணவீக்கம் (WPI) அக்டோபர் மாதம் 8.39 சதவீதமாகக் குறைந்துள்ளது, மார்ச் 2021 க்குப் பிறகு இதுதான் மிகவும் குறைவான அளவீடாக உள்ளது. செப்டம்பர் மாதத்தில் இதன் அளவு 10.70 சதவீதமாக இருந்தது.
18 மாதங்கள்
மொத்த விலைக் பணவீக்கம் (WPI) கடந்த 18 மாதங்களில் முதல் முறைாக ஒற்றை இலக்கத்திற்கு வந்தது உள்ளது. கடைசியாக மார்ச் 2021-ல் மொத்த விலைக் பணவீக்கம் 7.89 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications