இந்திய ரீடைல் முதலீட்டாளர்கள் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கைக்கு பின்பு பெரும் சரிவை பதிவு செய்துள்ள அதானி குழும பங்குகளை அதிகளவில் வாங்கி குவித்துள்ளனர். ஜனவரி 24 ஆம் தேதி வெளியான ஹிண்டன்பர்க் அறிக்கை மூலம் பெரும் சரிவை பதிவு செய்த நிலையில், இந்த சரிவை ரீடைல் முதலீட்டாளர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்றால் மிகையில்லை.
டிசம்பர் காலாண்டு முடிவையும் மார்ச் காலாண்டு முடிவையும் ஒப்பிட்டு பார்க்கும் போது தனிநபர் ரீடைல் முதலீட்டாளர்கள் அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களில் சுமார் 8 நிறுவனங்களில் முதலீடு செய்து அதிக பங்குகளை பெற்றுள்ளனர். செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களும் உயர்வுடன் உள்ளது.

மார்ச் காலாண்டின் 3 மாதம் அதானி குழுமத்திற்கு பெரும் போராட்ட காலமாக அமைந்தாலும் அதானி குழுமம் மீதான நம்பிக்கை மற்றும் நீண்ட கால முதலீட்டு கண்ணோட்டம் ஆகியவை வாயிலாக ரீடைல் முதலீட்டாளர்கள் அதிக முதலீட்டை செய்துள்ளனர்.
டிசம்பர் காலாண்டு முடிவில் அதானி குழுமத்தில் ரீடைல் முதலீட்டாளர்களின் பங்கீடு

அதானி எண்டர்பிரைசஸ் - 1.86 சதவீதம்
அதானி போர்ட்ஸ் & SEZ - 2.86 சதவீதம்
அதானி கிரீன் எனர்ஜி - 1.06 சதவீதம்
அதானி டிரான்ஸ்மிஷன் - 0.77 சதவீதம்
அதானி வில்மார் - 8.94 சதவீதம்
அதானி டோட்டல் கேஸ் - 1.55 சதவீதம்
NDTV - 14.11 சதவீதம்
அம்புஜா சிமெண்ட் - 5.52 சதவீதம்
மார்ச் 31 காலாண்டு முடிவில் எல்ஐசி நிறுவனம், அதானி குழுமத்தில்

அதானி எண்டர்பிரைசஸ் - 3.41 சதவீதம்
அதானி போர்ட்ஸ் & SEZ - 4.1 சதவீதம்
அதானி கிரீன் எனர்ஜி - 2.33 சதவீதம்
அதானி டிரான்ஸ்மிஷன் - 1.36 சதவீதம்
அதானி வில்மார் - 9.49 சதவீதம்
அதானி டோட்டல் கேஸ் - 2.39 சதவீதம்
NDTV - 17.54 சதவீதம்
அம்புஜா சிமெண்ட் - 7.23 சதவீதம்
இந்த நிலையில் ஏசிசி, அதானி பவர் ஆகிய நிறுவனங்களின் பங்கீடு அளவுகள் மும்பை பங்குச்சந்தையில் வெளியாகாத நிலையில், இதன் தரவுகள் இல்லை.


Click it and Unblock the Notifications