இந்தியாவில் ஜூன் மாதத்தில் கடைசி 15 நாளில் ரீடைல் விற்பனை எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகளவில் சரிந்து காணப்படுகிறது. இதனால் வியாபாரிகள் சோகத்தில் உள்ளனர்.
ஜூன் 15 முதல் 30ஆம் தேதி வரையிலான காலத்தில் கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் இந்தியாவில் மால்களில் இருக்கும் ரீடைல் கடைகளில் 77 சதவீத விற்பனை சரிவும், மற்ற கடைகளில் 62 சதவீத சரிவும் பதிவாகியுள்ளது என ரீடைலர் அசோசியேஷன் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு இந்தியா முழுவதும் சிறிதும் பெரிதுமாக 100க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்து இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த ஜூன் மாதத்தில் மக்கள் அதிகளவில் கன்சியூமர் எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கியதால் இப்பிரிவு விற்பனை ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது என்றும், இப்பிரிவின் வர்த்தக உயர்வால் உணவு, ஆடை, காலணிகள், மற்றும் நகைகளின் வர்த்தக வளர்ச்சி குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது ரீடைலர் அசோசியேஷன் ஆப் இந்தியா.
67 சதவீத சரிவு
இந்தியா வர்த்தகச் சந்தையில் ரீடைல் பிரிவு வர்த்தகம் ஜூன் மாதத்தின் கடைசி 15 நாட்களில் கடைகள் அதிகம் திறந்து வைத்திருந்த போதிலும் கடந்த வருடத்தை விடவும் 67 சதவீத வர்த்தகம் சரிந்துள்ளது.
இந்திய பொருளாதாரம்
இந்தியாவில் பொருளாதாரச் சந்தையின் அடித்தளமே நுகர்வோர் சந்தையும், ரீடைல் வர்த்தகம் தான். கொரோனா பாதிப்பால் நாட்டின் வர்த்தகம் மற்றும் உற்பத்தி சந்தை கடுமையாகப் பாதிக்கப்பட்டன் எதிரொலியாக முதல் காலாண்டில் ரீடைல் சந்தை சுமார் 74 சதவீதம் வரையில் சரிந்த நிலையில் தற்போது ஜூன் காலாண்டில் சற்று குறைந்து 67 சதவீதமாக உள்ளது.
முக்கியத் துறைகள்
கடந்த 3 மாதத்தில் உணவு, மளிகை பொருட்கள், நுகர்வோர் பொருட்கள், பர்னீச்சர் ஆகியவற்றின் வர்த்தகம் சரிவில் இருந்து வேகமாக மீண்டு வருவதாக ரீடைலர் அசோசியேஷன் ஆப் இந்தியா அமைப்பின் ஆய்வுகள் கூறுகிறது.
ஜூன் 15 முதல் 30ஆம் தேதி காலகட்டத்தில் பெரும்பாலான வர்த்தகத் துறையின் விற்பனை அளவு கடந்த வருடத்தை விடவும் 64 முதல் 70 சதவீதம் வரையில் சரிந்து காணப்பட்ட நிலையில் நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் விற்பனை மட்டும் வெரும் 19 சதவீத சரிவை மட்டுமே பதிவு செய்திருந்தது.
அதிகப் பாதிப்பு
கடந்த சில மாதங்களாக அதிகளவிலான வர்த்தகச் சரிவை சந்தித்து வந்த உணவகங்கள் ஜூன் கடைசி 15 நாட்களில் சற்று குறைந்து இத்துறை வர்த்தகம் 71 சதவீதம் சரிந்துள்ளது.


Click it and Unblock the Notifications