இந்தியாவில் நிலவி வரும் மந்த நிலையால் வாகன விற்பனையானது கடந்த பல மாதங்களாக சரிந்து வந்த நிலையில், அதில் விதிவிலக்காக பயணிகள் வாகன விற்பனை ஒரு சதவிகிதம் அதிகரித்துள்ளதாக FADA அறிவித்துள்ளது.
எனினும் இது கடந்த அக்டோபர் மாதத்தில் 11 சதவிகிதம் ஏற்றம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஃபெடரேஷன் ஆஃப் ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது பயணிகள் வாகன விற்பனையானது 1 சதவிகிதம் அதிகரித்து, 2,57,271 வாகனங்களாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. எனினும் இது கடந்த அக்டோபர் மாதத்தில் 11 சதவிகிதம் அதிகரித்து, 2,48,036 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.

இதே மோட்டார் சைக்கிள் வாகன விற்பனையானது கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது, 17,05,495 வாகனங்களாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது ஃபடா. நாட்டில் சரியான பருவமழை மற்றும் பலத்த சலுகைகள், மற்றும் உற்பத்தியாளர்கள் பழைய இருப்புகளை காலி செய்யும் பொருட்டு அதிரடியான பல சலுகைகளை கொடுத்து வருகின்றன. இதனால் விற்பனையும் சற்று அதிகரித்துள்ளதாக ஃபடா தெரிவித்துள்ளது.
எனினும் பொருளாதாரத்தில் நிலவி வரும் மந்தநிலை மற்றும் உள்கட்டமைப்பு, உற்பத்தி துறையில் செயல்பாட்டின் காரணமாக வணிக வாகன விற்பனையானது தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த நிலையில் இது கடந்த நவம்பர் மாதத்தில் 8 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு, 77,394 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.
மேலும் ஒட்டுமொத்தமாக வாகனங்களின் சில்லறை விற்பனையானது வெறும் 2 சதவிகிதம் மட்டுமே அதிகரித்து, 21,05,508 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பண்டிகை காலத்தினை தவிர வாகனத்துறையில், பயணிகள் வாகனத்தை தவிர மற்ற வாகனங்களின் விற்பனை தொடர்ந்து பலவீனமான நிலையில் உள்ளது. எனினும் சில்லறை விற்பனையானது தற்போது சிறிய அளவிலான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது கவனிக்கதக்கது. இது இந்த வாகன சமூகத்திற்கு ஒரு உற்சாகத்தையும் அளித்துள்ளது.
நீடித்த பருவமழைக்கு பிறகு விவசாய உற்பத்தியானது, இப்போது சந்தைக்கு வருவதால், செமி அர்பன் மற்றும் கிராமப்புற சந்தைகளில் வாகன விற்பனையும் அதிகரித்துள்ளது. மேலும் இதனுடன் அரசின் நடவடிக்கைகளும் சற்று சாதகமான பங்கினை கொண்டுள்ளன என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் தற்போதைக்கு சில்லறை வாகன விற்பனையானது சற்று அதிகரிக்க ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications