இந்தியாவில் பல காரணங்களுக்காக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கடந்த சில காலாண்டுகளாக அதிகளவிலான வர்த்தகச் சரிவை எதிர்கொண்டு வரும் நிலையில், லாக்டவுனில் தளர்வு அளிக்கப்பட்டும் விற்பனை துவங்கிய போது மிகவும் சிறப்பான வர்த்தகத்தைப் பெற்று வருகிறது.
இதுவும் நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைக்காக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அறிவித்த தள்ளுபடி மற்றும் சிறப்பு விற்பனையின் மூலம் அக்டோபர் மாதத்தில் கார் மற்றும் பைக் விற்பனை புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
ஆட்டோமொபைல் தொழிற்சாலையில் இருந்து ரீடைல் சந்தைக்கு வந்த வாகனங்கள் அதிகமாக இருந்தாலும், ரீடைல் சந்தையில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை பெரிய அளவிலான சரிவை அடைந்துள்ளது.
கார் விற்பனை
இந்திய ஆட்டொமைபைல் நிறுவனங்கள் பயணிகள் வாகன பிரிவில் கடந்த நிதியாண்டின் அக்டோபர் மாதத்தில் 2,71,737 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்த நிலையில், 2020 அக்டோபர் மாதத்தில் சுமார் 3,10.294 வாகனங்களை விற்பனை செய்து சுமார் 14.19 சதவீத வர்த்தக வளர்ச்சியை அடைந்துள்ளது.
பைக் விற்பனை
இதேபோல் பைக் விற்பனையில் கடந்த வருடம் 17,57,180 பைக்குகளை விற்ற இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்த வருடம் அக்டோபர் மாகம் 20,53,814 பைக்குகளை விற்று அசத்தியுள்ளது.
இதில் ஸ்கூட்டர் பிரிவில் 1.79 சதவீதமும், மோட்டர்சைக்கிள் பிரிவில் 23.8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது
3 சக்கர வாகனங்கள்
கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் முழுமையாக மீண்டு வராத காரணத்தால் வர்த்தக வாகனங்கள் அதிகப்படியாக இருக்கும் 3 சக்கர வாகன பிரிவில் அக்டோபர் மாத விற்பனையில் 60.91 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 66,985 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 26,187 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது.
மாருதி சுசூகி மாஸ்
அக்டோபர் மாதத்தில் மாருதி சுசூகி 1,63,656 வாகனங்களை விற்பனை செய்து சுமார் 1764 சதவீத வளர்ச்சியும், ஹூண்டாய் 56,605 கார்களை விற்பனை செய்து 13,9 சதவீத வளர்ச்சியும், கியா மோட்டார்ஸ் அதிகப்படியாக 20,621 கார்கள் விற்பனை செய்து 61.25 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.
ஹீரோ உண்மையிலேயே ஹீரோ தான்
இதே அக்டோபர் காலகட்டத்தில் ஹீரோ மோட்டோகார்ப் சுமார் 7,91,137 பைக்குகளை விற்பனை செய்து 34.78 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இதேபோல் ஹோண்டா 1.36 சதவீதமும், டிவிஎஸ் மோட்டார் 19.27 சதவீத வளர்ச்சியும் அடைந்துள்ளது.
ரீடைல் விற்பனை
ஆட்டோமொபைல் தொழிற்சாலையில் இருந்து ரீடைல் சந்தைக்கு வந்த வாகனங்கள் அதிகமாக இருந்தாலும், ரீடைல் சந்தையில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை சுமார் 23.99 சதவீதம் சரிந்துள்ளது.
கடந்த வருடம் 18,59,709 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் அளவு 23.99 சதவீதம் சரிந்து 14,13,549 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது.


Click it and Unblock the Notifications