உலகிலேயே மிகப்பெரிய தங்க நகை நுகர்வோராக இந்தியா உள்ளது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்தாலும் மாதம் 1 கிராமாவது வாங்கி சேமித்து விட வேண்டும் என்று எண்ணும் இந்திய குடும்பங்கள் தான் அதிகம். அதற்கு ஏதுவாக வருகின்ற ஏப்ரல் 30-ஆம் தேதி அன்று அட்சய திருதியை கொண்டாடப்பட உள்ளது. அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் அது லட்சுமி தேவியின் பூரண அருளைப் பெற்று தரும் என்பது நீண்ட காலமாக இருந்து வரும் நம்பிக்கை. இதன் காரணமாக அட்சய திருதியை வரும்போது தங்கத்தின் விலை அதிகமாகும்.
இந்த ஆண்டு தங்கத்தின் விலை யாரும் எதிர்பாராத வகையில் 10 கிராமுக்கு ரூ.1 லட்சம் என்ற இலக்கை எட்டியுள்ளது. ஏப்ரல் 17-ஆம் தேதி அன்று சர்வதேச அரசியல் காரணங்களாலும், அமெரிக்கா டாலரின் மதிப்பு குறைந்து வருவதாலும், 24 கேரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 97,310 ரூபாயாக அதிகரித்தது. 22 கேரட் தங்கத்தின் விலை 89,200 ரூபாயாக புதிய உச்சத்தை எட்டியது.

இவ்வளவு வேகமாக தங்கத்தின் விலை உயர்ந்து வருவதால் மக்கள் புதிதாக நகை வாங்குவதற்கு பதிலாக தங்களிடம் இருக்கும் பழைய நகைகளை விற்பதற்கும், கொடுத்துவிட்டு புதிய நகைகளாக வாங்குவதற்கும் தான் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் நகைக்கடைகளில் பழைய தங்கத்தை மாற்றி தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
சென்கோ கோல்ட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சுவங்கர் சென், 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது பழைய தங்கத்தை மாற்றி புதிதாக நகை வாங்குபவர்களின் எண்ணிக்கை 30 முதல் 35 சதவீதம் அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளார். சென்கோ கோல்ட் லிமிடெட் நிறுவனம் இந்தியா முழுவதும் 171 கடைகளைக் கொண்டுள்ளது.
24 கேரட் தங்கத்தின் விலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 23.84 சதவீதமும், கடந்த 2 ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் 38 சதவீதமும் உயர்ந்திருக்கிறது. டாடா குழுமத்திற்கு சொந்தமான தனிஷ்க் நகை பிராண்டிலும் தங்கத்தின் விலை உயர்வு எதிரொலித்துள்ளது. குறைந்த விலையில் நகைகள் விற்கப்படாததால் வாடிக்கையாளர் வருகையில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் அதிக விலை கொண்ட நகைகளுக்கான தேவை விலை அதிகரிப்பிலும் இருந்து வருகிறது. இதனால் தங்க விற்பனை இரட்டை இலக்கத்தில் வளர்ச்சி அடைந்துள்ளதாக கடந்த வாரம் நிறுவனம் வெளியிட்ட மார்ச் காலாண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் 500க்கும் மேற்பட்ட தனிஷ்க் பிராண்டு கடைகள் இயங்கி வருகின்றன. இந்நிறுவனம் உள்நாட்டு நகை வணிகத்திலும் 24 சதவீத வருவாய் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
ஏப்ரல் 30-ஆம் தேதி அட்சய திருதியை கொண்டாடப்படுவதால் சில்லறை விற்பனையாளர்கள் தொடர்ந்து சலுகைகளை வழங்க தொடங்கியுள்ளனர். வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு புது புது தயாரிப்புகள் மற்றும் குறைந்த எடையுள்ள டிசைன்களில் நகைகளை செய்து விற்பனைக்கு தயாராக வைத்துள்ளனர்.
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் வாடிக்கையாளர்களுக்கு மேக்கிங் சார்ஜ் கட்டணங்களில் 25% வரை தள்ளுபடி வழங்குகிறது. அதேபோல வைர நகைகளின் மேக்கிங் சார்ஜிலும் 25% தள்ளுபடி வழங்கப்படுகிறது. சில நகைக்கடைக்காரர்கள் விலையை லாக் செய்யும் வசதியையும் வழங்குகின்றன. அதாவது தங்கம் விலை குறைவாக இருக்கும் போது பெயரளவு கட்டணம் செலுத்தி விலையை லாக் செய்து வைக்கலாம். அதன் பிறகு அந்த விலை கொடுத்தே விலை ஏறினாலும் தங்கத்தை வாங்க முடியும். இப்படி ஏறிவரும் தங்க விலையை சரி செய்யவும், வரும் அட்சய திருதியை அன்று மக்களை நகை வாங்க ஈர்க்கவும் ரீடைல் விற்பனையாளர்கள் அதிக சலுகைகளை வழங்க தொடங்கியுள்ளனர்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications