சென்னை: ஓய்வுகாலத்தை நிம்மதியாக கழிப்பதே பெரும்பாலானோரின் கனவு. ஆனால், போதுமான பணம் இல்லாமல் இருந்தால், உங்களுடைய ஓய்வுகாலம் சுமையாக மாறிவிடும். நீங்கள் பொதுத் துறை அல்லது தனியார் துறையில் சம்பளம் வாங்கும் ஊழியராக இருந்தாலும், அல்லது வழக்கறிஞர், மருத்துவர் போன்ற ஒரு தொழில்முறை நிபுணராக இருந்தாலும் சரி, ஓய்வுக்கு நிதி பாதுகாப்பு அவசியமான ஒன்று. உங்கள் ஓய்வு காலத்தை திறம்பட கழிக்க உதவும் 555 ரூல் பற்றி தெரியுமா?
555 ரூல் என்றால் என்ன?: 555 ரூல் என்பது ஒரு முதலீட்டு முறையாகும். இது 55 வயதில், ரூ. 5 கோடி ஓய்வுகால கார்பஸ்-ஐ உருவாக்க உதவும். இது மூன்று முக்கிய குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டது

60 வயதிற்கு முன் ஓய்வுபெற திட்டமிடுதல்: 555 ரூலின் படி, உங்களின் முதல் இலக்கு, 60 வயதிற்கு முன்பு ஓய்வு பெறுவது. இதன் பொருள், நீங்கள் 55 வயதிலேயே ஓய்வு பெற திட்டமிட வேண்டும் என்பதுதான்.
ஒவ்வொரு ஆண்டும் 5% SIP அதிகரிப்பு: அந்த ரூலின் படி இரண்டாவது குறிக்கோள், ஒவ்வொரு ஆண்டும் உங்கள் SIP முதலீட்டை 5 சதவீதம் அதிகரிப்பது. இதை "ஸ்டெப்-அப் SIP" என்று கூறுவார்கள். இது விரைவாக உங்கள் கார்பஸ்-ஐ வளர்க்க உதவும்.
ரூ.5 கோடி இலக்கு: இந்த 555 ரூலின் மூன்றாவது மற்றும் இறுதி இலக்கு, 55 வயதில் ரூ.5 கோடி ஓய்வுகால கார்பஸ்-ஐ உருவாக்குவது. 55 வயது வரை ஸ்டெப் அப் SIP மூலம் தொடர்ந்து முதலீடு செய்தால், இந்த இலக்கை எளிதில் அடையலாம்.
ஸ்டெப் அப் SIP-கள் கூட்டு வட்டி முறையை பயன்படுத்துகின்றன. இதன் மூலம் நீங்கள் பெறும் வருமானத்திற்கும், வட்டிக்கும் சேர்த்து வட்டி கிடைக்கும். இதனால் உங்களுடைய கார்பஸ் விரைவாக வளரும். நீங்கள் ஆன்லைனில் இருக்கும் SIP கால்குலேட்டர்களை இதற்குப் பயன்படுத்தலாம். ரூ. 5 கோடி உங்களுடைய இலக்காக இருந்தால், அதற்கு உங்களுடைய 55வது வயதிலிருந்து நீங்கள் திட்டமிட வேண்டும் என்பதே இந்த பார்முலாவின் அடிப்படை.
உங்கள் ஓய்வு காலத்தை திறம்பட கழிக்க ரூ. 2 கோடி கார்ப்பஸை எவ்வாறு உருவாக்குவது என்பதை பார்ப்போம்.
ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் 25 வயதில் மாதம் ரூ.5,000 என்ற சிறிய தொகையை முதலீடு செய்யத் தொடங்குகிறீர்கள் என்றால், ஒவ்வொரு ஆண்டும் SIP தொகையை 5 % அதிகரிக்கவும்.12% ஆண்டு வருமானத்துடன், 30 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது உங்களுடைய 55 வயதில், நீங்கள் சுமார் ரூ. 2.63 கோடி கார்பஸ் தொகையுடன் ஓய்வு பெறலாம். மேலும் ஓய்வூதிய கார்பஸைக் கணக்கிடுவதற்கு ஆன்லைன் ஸ்டெப் அப் SIP கால்குலேட்டர்களை நீங்கள் பயன்படுத்தலாம்.
More From GoodReturns

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?



Click it and Unblock the Notifications