சென்னை: நீங்கள் ஓய்வுக்குப் பிறகு நிம்மதியான மற்றும் பாதுகாப்பான வாழ்க்கை வாழ விரும்பினால், அதற்கு ஓய்வுக்கு பிறகு மாத வருமானம் பெறுவது அவசியம். இதற்காக நீங்கள் முதலீடு செய்ய வேண்டிய பல்வேறு முதலீட்டு திட்டங்கள் உள்ளன. இந்தப் பதிவில், ஓய்வூதியத்திற்குப் பிறகு மாதந்தோறும் வருமானம் தரும் 3 சிறந்த திட்டங்களைப் பற்றிப் பார்ப்போம்.
ஓய்வுக்குப் பின் பொருளாதார ரீதியாக பாதுகாப்பான வாழ்க்கையை வாழ விரும்பாதவர் யாரும் இருக்க முடியாது. நாம் அனைவரும் அதைத் தான் விரும்புகிறோம் அல்லவா.. மேலும் நம்மில் பெரும்பாலோர் ஏற்கனவே அந்த இலக்கை நோக்கி வெவ்வேறு முதலீட்டு விருப்பங்களை முயற்சிக்கிறோம். சிலர் ஓய்வுக்குப் பிறகு எப்படி வருமானம் பெறலாம்? என்பதற்காக வெவ்வேறு முதலீட்டு விருப்பங்களில் ஏற்கனவே முதலீடு செய்திருப்பார்கள். இன்னும் முதலீடு செய்யாதவர்கள் கீழ்காணும் இந்தத் திட்டங்களில் முதலீடு செய்வது குறித்து யோசிக்கலாம்.

தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டம் (POMIS): அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் மிகவும் பிரபலமான முதலீட்டு விருப்பங்களில் ஒன்றாகும். இந்திய அரசாங்கத்தின் இந்த POMIS திட்டம் மிகவும் லாபகரமானதாகும். இதன் மூலம், நீங்கள் 7.4 % வருடாந்திர வருமானத்தைப் பெறலாம்.
இந்தத் திட்டத்தில் 3 நபர்கள் வரை ஜாயிண்ட் அக்கவுண்ட்டைத் திறக்க முடியும் மற்றும் அனைத்து இந்திய குடிமக்களும் ஒரு அக்கவுண்ட் வைத்திருக்கலாம். அதிகபட்சமாக தனிநபர் என்றால் ரூ. 9 லட்சம் வரை டெபாசிட் செய்ய முடியும். அதுவே ஜாயிண்ட் அக்கவுண்டாக இருந்தால் ரூ. 15 லட்சம் வரை நீங்கள் டெபாசிட் செய்யலாம்.
நீங்கள் ஜாயிண்ட் அக்கவுண்ட்டை தொடங்கினால் தற்போதைய வட்டி விகிதமான 7.4 சதவீத வட்டியுடன் ஓய்வுக்குப் பிறகு மாதம் ரூ. 9000-திற்கு மேல் சம்பாதிக்கலாம்.
Systematic Withdrawal Plan (SWP) முதலீடு: SWP என்பது மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை முறையாக திரும்பப் பெற உதவும் திட்டம் ஆகும். இதற்காக, நீங்கள் SIP முதலீட்டுத் திட்டம் அல்லது ஓய்வுக்கு முன் மற்ற வழிகள் மூலம் மியூச்சுவல் ஃபண்டில் பணத்தை முதலீடு செய்ய வேண்டும்.
முதலில் நீங்கள் SIP-கள் மூலம் ஒரு கார்பஸ்-ஐ உருவாக்குகிறீர்கள். பின்னர் நீங்கள் ஓய்வுபெறும் போது, SWP மூலம், ஒவ்வொரு மாதமும் சில மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை விற்று உங்கள் மாதாந்திர வருமானத்தைப் பெறுவீர்கள்.
நீங்கள் எவ்வளவு அடிக்கடி பணத்தை எடுக்க விரும்புகிறீர்கள் என்பதை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் மற்றும் SWP-ஐத் தொடங்க சரியான விவரங்களைக் கொடுக்க வேண்டியது அவசியம்.
அடல் பென்ஷன் யோஜனாவில் (APY) முதலீடு: வருமான வரி செலுத்தாதவர்களுக்கு இது சிறந்தத் தேர்வாக இருக்கும். APY திட்டத்தின் மூலம், ஓய்வுக்குப் பிறகு வருமானத்தைப் பெறலாம். இந்தத் திட்டம் 18 முதல் 40 வயதுடைய தனிநபர்களுக்கு ஏற்றது. 60 வயது வரை மாதாந்திர பங்களிப்பாக முதலீடு செய்யலாம். நீங்கள் ஓய்வு பெற்றவுடன், உங்கள் பங்களிப்புகளின் அடிப்படையில், ரூ. 1,000 முதல் ரூ. 5,000 வரையிலான மாத ஓய்வூதியத்தைப் பெறுவீர்கள்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications