சமீபகாலமாக நாட்டில் டிஜிட்டல் கைது என்பது ஒரு அச்சுறுத்தலாக மாறி வருகிறது. மோசடி செய்யும் சைபர் குற்றவாளிகள் நாட்டில் அதிகரித்து காணப்படுகின்றனர். இவர்களால் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் வயதானவர்கள் மற்றும் சாமானிய மக்கள் ஆக தான் இருக்கின்றனர். மோசடி செய்யும் நபர்கள் ஏதேனும் ஒரு வகையில் அவர்களை அச்சுறுத்தி பணத்தை சுருட்டிவிட்டு செல்கின்றனர். அதேபோன்ற ஒரு சம்பவம் ஒன்று சமீபத்தில் நடந்துள்ளது. அது எங்கு எப்படி என பார்க்கலாம்
டெல்லியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) வங்கி மேலாளர் ஒருவர், 68 வயதான ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியரை சில நாட்களுக்கு முன்பு "டிஜிட்டல் கைது" மோசடிக்கு பலியாகாமல் காப்பாற்றியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு சொந்தமான ரூ.79 லட்சத்தை வங்கி மேலாளர் சேமித்து கொடுத்துள்ளார். முன்னதாக அந்த பெண் வங்கியில் உள்ள அனைத்து பணத்தையும் அந்த டிஜிட்டல் அரஸ்ட் நபருக்கு மாற்ற தயாராக இருந்த நிலையில் தடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 1 முதல் நவம்பர் 15, 2024 வரை, நாடு முழுவதும் 92,323 டிஜிட்டல் கைது வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் மோசடி செய்யப்பட்ட தொகை ரூ.2,140.99 கோடி ஆகும். மோசடி செய்பவர்கள் தனிநபரின் தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்து, அவர்களின் தொலைபேசி/வீடியோ அழைப்புகளை மேற்கொள்வதுடன் பல்வேறு சட்ட அமலாக்க நிறுவனங்களின் அதிகாரிகளாகக் காட்டிக்கொண்டு சில சமயங்களில் இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து பயமுறுத்தும் சூழ்நிலையை உருவாக்கி பணம் பறிப்பது போன்றவற்றைச் செய்து வருகின்றனர்.
அந்த வகையில்தான், தனியாக வசிக்கும் பள்ளி ஆசிரியைக்கு டிசம்பர் 21-ம் தேதி கனரா வங்கியில் நடந்த ரூ.300 கோடி மோசடியில் தனது பெயர் இருப்பதாகவும், விசாரணையில் தனது பெயர் வெளிவர வேண்டுமானால் காவல்துறைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூறி அந்த மோசடி கும்பல் ஒரு அழைப்பை செய்துள்ளது.
அந்த அழைப்பில் சில நிமிடங்களுக்குப் பிறகு, அடையாளம் தெரியாத மோசடி நபர் ஒருவர் வாட்ஸ்அப்பில் ஆடியோ அழைப்பை செய்தார். அதில் டெல்லி காவல்துறையின் லோகோ காட்சிப்படுத்தப்படுத்தியுள்ளனர்.அப்போது, பாதிக்கப்பட்ட பெண் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவள் பெயரில் உள்ள அனைத்து சேமிப்புகள் மற்றும் வங்கிக் கணக்குகளையும் வெளியிட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருக்கும் பணம் சட்டப்பூர்வ வழிகளில் சம்பாதித்ததா என்பதை உறுதிப்படுத்த, சுத்திகரிப்பு சோதனை நடத்துவதாகவும், பின்னர் முழுத் தொகையும் 4% வட்டியுடன் அவருக்குத் திருப்பித் தரப்படும் என்றும் கூறியுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில், அந்த பெண், வங்கியில் உள்ள தனது பணத்தை எடுப்பதற்காக வங்கி கிளையை நாடியுள்ளார். டிசம்பர் 24 அன்று குஜராத்தில் உள்ள வங்கிக் கணக்கிற்கு ரூ.20 லட்சத்தை மாற்றுவதற்காக அந்த பெண் வங்கி மேலாளரிடம் பேசியபோதே அவரிடம் ஏதோ பிரச்சனை இருப்பதை உணர்ந்ததாக கூறியுள்ளார்.
அந்த பெண் செப்டம்பர் 2024 முதல் அவர் வங்கியின் வாடிக்கையாளராக இருந்துள்ளதாகவும், பள்ளி ஆசிரியையாக இருந்ததால், அவர் தனது கணக்கில் இருந்து ஏதேனும் சிறிய பிடித்தம் செய்யப்பட்டாலும் கூட அதில் கவனம் செலுத்தி கேட்பர் என்றும் ஆனால், டிசம்பர் 24ம் தேதி அந்த பெண் வங்கிக்கு சென்ற போது, சாதாரண நிலையில் இருக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
ஏதோ பதட்டத்துடன் அடிக்கடி தண்ணீரை குடித்து கொண்டே இருந்ததாகவும், ஏன் மூத்த குடிமக்கள் சேமிப்புச் சான்றிதழைக் மூட விரும்புகிறீர்கள் என கேட்டதற்கு, அது என் சொந்த விஷயம் நான் பார்க்க வேண்டும் என்று பதிலளித்த்தாகவும் வங்கி மேலாளர் கூறினார்.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட அந்த பெண் வங்கியில் உட்காந்து கொண்டிருக்கும்போது, தொடர்ந்து தனது தொலைபேசியைப் பார்த்துக் கொண்டே இருந்ததாகவும், வங்கியில் மொபைல் நெட்வொர்க் சரியாக இல்லாததால், தொலைபேசியில் யாரிடமாவது பேசுவதற்காக பலமுறை வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்று வந்ததாகவும் கூறினார். மேலும், அவருக்கு ரூ.20 லட்சம் தேவைப்படும் நேரத்தில் கணக்கில் 20 லட்சத்திற்கும் குறைவான தொகை மட்டுமே இருந்ததாகவும், அப்போது தன்னிடம் கொஞ்சம் பணம் போட்டு ரூ.20 லட்சம் கொடுக்கும்படி கேட்டுள்ளார் என்று கூறினார்.
எனவே, வங்கி மேலாளர் தனது கையில் இருந்த பணத்தை புரட்டி ஒட்டுமொத்தமாக ரூ.19 லட்சத்தை மாற்ற முயற்சித்துள்ளார். ஆனால் பரிவர்த்தனையை நிறுத்தி வைத்ததாகவும், ஆதாரமாக வவுச்சரின் படத்தைக் கிளிக் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அந்த பெண் கேட்டுள்ளார். எனவே அதை மறுத்துவிட்டதாக வங்கி மேலாளர் கூறியுள்ளார்.
பரிவர்த்தனையின் நோக்கம் குறித்து வங்கி மேலாளர் பலமுறை கேட்டதற்கு, அந்த பெண், குஜராத்தில் தான் வாங்கவிருந்த ஒரு சொத்திற்கு இடைத்தரகராகச் செயல்படும் தனது மருமகனுக்கு பேசியதாக கூறியுள்ளார்.
அதேபோல், டிசம்பர் 27 அன்று, அந்த பெண் மீண்டும் வங்கிக்கு திரும்பியுள்ளார். இந்த முறை ரூ.30 லட்சம் மதிப்புள்ள மற்றொரு சேமிப்புத் திட்டத்தைக் கலைத்து, அதே நேரத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான மியூச்சுவல் ஃபண்ட்-ஐயும் எடுக்க முயற்சித்துள்ளார்.
எனவே அந்த வங்கி மேலாளர் வங்கியில் வேலை செய்யும் ஊழியர்களிடம் அந்த பெண் மீண்டும் வந்தால் அவளுடைய கோரிக்கையை ஏற்க வேண்டாம் எனவும், ஊழியர்கள் யாரும் அவளது கோரிக்கையைச் செயல்படுத்தாததால், அவர் என்னிடம் வந்து ரூ.30 லட்சத்தை வேறொரு வங்கிக் கணக்கிற்கு மாற்றச் சொன்னதாகவும் கூறியுள்ளார். ஆனால் வங்கி மேலாளர் இந்த முறை அவளது குடும்பத்தில் இருந்து யாரேனும் வராதவரை எந்த பணத்தையும் அனுப்ப மாட்டேன் என்று கூறியதாக தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட அந்த பெண் மிகுந்த கலக்கத்துடன் பயமாகவும் இருந்ததை உணர்ந்த வங்கி மேலாளர், அவர் யாரிடமோ போனில் கெஞ்சியதையும், சிசிடிவியில் அவர் வெளியில் அமர்ந்து கஷ்டப்பட்டு கொண்டிருந்ததை பார்த்துள்ளார். அந்த நேரத்தில் அப்பெண்ணிடம் இருந்த செல்போனை எடுத்து பார்த்ததாகவும் பாதிக்கப்பட்டவர் பயத்தில் நடுங்கியதாக மேலாளர் கூறினார்.
பணத்தை ஏற்பாடு செய்யாவிட்டால், தான் கைது செய்யப்படுவேன் என்று அந்தப் பெண் கவலைப்பட்ட நிலையில் சமீபத்தில் டிஜிட்டல் கைதுகள் பற்றிய பயிற்சியை மேலாளர் பெற்றிருந்ததாகவும், எனவே அந்த பெண் ஏமாற்றப்படுவதைப் புரிந்துகொண்டதாகவும், எனவே அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் அதை தொடர்ந்து இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதாகவும் வங்கி மேலாளர் கூறினார்.
இந்த குற்றத்தில் ஈடுபட்டவர் 24 மணி நேரமும் அந்த பெண்ணின் நடமாட்டத்தைப் பார்த்து வந்துள்ளதாகவும், அவர் காய்கறி வாங்க கடைக்கு செல்லவேண்டுமெனில் அவர்களின் அனுமதி பெற வேண்டும் என்றும் மிரட்டி வந்துள்ளனர். இது அந்த பெண்ணின் செல்போனில் பேசியுள்ள மெசேஜ்களின் மூலம் தெரியவந்துள்ளது.
அதேபோல், அந்த பெண் வங்கிக்கு செல்லும் வரை கிட்டத்தட்ட ஆறு நாட்கள் பிணைக் கைதியாக இருந்துள்ளதாகவும், அப்பகுதியில் உள்ள ரிக்ஷாக்காரர்கள் கூட காவல்துறையின் முகவர்கள் என்றும் அவர் கண்காணிப்பில் இருப்பதாகவும் மோசடியாளர்கள் அவரை நம்ப வைத்துள்ளதாகவும் வங்கி மேலாளர்க் கூறியுள்ளார்.ஆனால் அந்த பெண் மற்றொரு வங்கிக் கணக்கில் இருந்து, குற்றம் சாட்டப்பட்டவருக்கு, 35 லட்ச ரூபாய் பணத்தை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், பாரதிய நியாய சன்ஹிதாவின் (பிஎன்எஸ்) பிரிவு 308 (2) (பணம் பறித்தல்), 319 (2) (ஆள் மூலம் ஏமாற்றுதல்), 61 (2) (குற்றச் சதி), 3(5) (பொது நோக்கம்) ஆகியவற்றின் கீழ் டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை, ஆனால் எஸ்பிஐயால் தடுக்கப்பட்ட ரூ.19 லட்சம் பாதிக்கப்பட்ட பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?



Click it and Unblock the Notifications