இந்தியாவின் தொழில்துறைகள், குறிப்பாக கார்ப்பரேட் உலகம், கடந்த பத்து ஆண்டுகளில் வேகமாக மாறி வருகிறது. இது ஒரு காலத்தில் சாதாரணமாக இருந்து வந்தது. ஊழியர்கள் 60 வயது வரை வேலை செய்து பின் ஓய்வு பெற்று வந்தனர். ஆனால் இப்போது அந்த நிலை மாறிவிட்டது. இந்தியாவின் பெரும்பாலான தனியார் நிறுவனங்களில், 40 வயதுக்கு மேல் உள்ள ஊழியர்களுக்கு வேலை இழப்பது ஒரு பெரிய ஆபத்தாக மாறிவிட்டது.
இந்தியா எப்படி மாறுகிறது?: இன்று இந்தியாவின் பெரும்பாலான நிறுவனங்கள், புதிய மற்றும் இளம் நபர்களை அதிகம் வேலைக்கு எடுக்கின்றன. 20-30 வயதுக்குள் உள்ளவர்கள் அதிக வேலை செய்யத் தயாராக உள்ளனர். குறைந்த சம்பளத்திலும் சம்மதிக்கிறார்கள். இதனால், 40 வயதுக்கு மேல் உள்ள ஊழியர்கள் அனுபவம் தாண்டி பழையவர்கள் என்று கருதப்படுகிறார்கள்.

முதலீட்டு வங்கியாளர் சர்தக் அஹுஜா கூறுகையில், இப்போது பல நிறுவனங்களில், 45 வயதுக்குப்பின் நீங்கள் தேவையற்றவராகத் தெரிகிறீர்கள். உங்கள் அனுபவம் எத்தனை இருந்தாலும், இளைஞர்களைப் போல வேகமாக வேலை செய்ய முடியவில்லை என்பதால், உங்களை சுமையாகவே பார்க்கிறார்கள்.
நேரடியாக வேலை இழக்கிறார்களா?: இல்லை. நிறுவனங்கள் இவர்களை நேரடியாக பணி நீக்கம் செய்யவில்லை. ஆனால், அவர்களிடம் வேலை கொடுக்காமல் விட்டு வைக்கிறார்கள். அதே நேரத்தில், புதிய இளம் குழுக்களை அமைத்து, அவர்களுக்கு பயிற்சிகள், திட்டங்கள், வாய்ப்புகள் எல்லாம் தருகிறார்கள். அந்தவகையில், நடுத்தர வயதினர்கள் (middle-aged employees) குறைவாகவே முக்கியத்துவம் பெறுகிறார்கள்.
அதற்குப் பிறகு என்ன நடக்கிறது?: பலர் சொந்தமாக சிறிய ஆலோசனை நிறுவனங்கள் தொடங்குகிறார்கள். நிஜமாகவே ஒரு லட்சியக் கனவில் இது நடக்கவில்லை என்றாலும், வேலை இல்லாத போக்கு என்பதாலேயே இது நடக்கிறது என்று அஹுஜா கூறுகிறார். இது உண்மையான தொழில் முனைவு இல்லை, ஆனால் பயத்தில் செய்யப்படும் முயற்சி என்று கூறுகிறார். இந்த நிறுவனங்கள் ஆரம்பத்தில் பெரிய லாபம் தரவில்லை. ஆனால், குடும்பத்தை ஓரளவு நடத்த வசதியாக இருக்கிறது.
இப்போது, 40 வயதுக்கு மேல் உள்ள பலர், புதிய தொழில்நுட்பங்களை, நிர்வாகத் திறன்களை கற்றுக் கொள்கிறார்கள். இதற்கு Upskilling என பெயர். உதாரணமாக: coding, தொழில்துறை மேலாண்மை, data analysis வாடிக்கையாளர் சேவை ஆகியவை போன்றவை அதிகமாக கற்றுக் கொள்ளப்படுகின்றன. சிலர் இதை மற்றவர்களுக்கும் கற்றுத் தருகிறார்கள்.
இந்த மாறும் நிலை நம் சமூகத்தில் சில பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. 45-ஐத் தாண்டியவுடன் வேலை இழந்தால், குடும்ப செலவுகள், குழந்தைகள் கல்விச் செலவுகள் போன்றவை நிர்வகிக்க கடினமாகிறது. திடீரென வேலை இழக்க நேர்ந்தால், மன உளைச்சல் ஏற்படும். புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ளத் தயக்கம் இருக்கும். இது இன்னும் வேலை வாய்ப்புகளை குறைக்கும். நேரம் வருவதற்கும் முன்னே, மக்கள் தங்களை மாற்றிக்கொள்ளும் முயற்சியில் இறங்கிவிடுகிறார்கள்.
60 வயதுவரை வேலை செய்வது என்பது இனி பலருக்கும் சாத்தியமில்லை. 40 வயதிலேயே வேலை இழக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதற்கு பயப்பட வேண்டியதில்லை ஆனால் தயாராக இருக்க வேண்டும். வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்.


Click it and Unblock the Notifications