ஒரு கிரிக்கெட் பேட்ச் போலதான் ரிட்டயர்மென்ட் முதலீடு.. கடைசி 25 ஓவர் ரொம்ப முக்கியம்..!!

இன்று இளம் தலைமுறையினரும் ஓய்வு காலத்துக்கான முதலீடு, சேமிப்பு குறித்து யோசிக்க துவங்கியது மட்டும் அல்லாமல் இளம் வயதிலேயே ஓய்வு பெறவும் திட்டமிடுகின்றனர். இந்த நிலையில் சமுக வலைத்தளத்தில் பாஸ்டன் ஸ்ரீராம் என்பவர் ஓய்வு காலத்துக்கான முதலீடும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை ஒப்பிட்டு ஒரு பதிவு செயதுள்ளார். இது பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பாஸ்டன் ஸ்ரீராம் அவர்கள் செய்த பதிவில் 20 -30 ஆண்டுகளுக்குப் பிறகு வரப்போகும் ஓய்வு காலத்துக்காக சேமித்தாலும் நம்மில் பலருக்கு முதலீட்டுத் தொகுப்பு (Portfolio) இன்று எவ்வளவு லாபம் கொடுத்துள்ளது என்று தொடர்ந்து கவனிப்பது ஒரு சுகானுபவம். முதலீட்டுத் தொகுப்பின் இன்றைய நிலை, குறிக்கோளுக்கு (Goal) பொருத்தமற்ற ஓன்று.

ஒரு கிரிக்கெட் பேட்ச் போலதான் ரிட்டயர்மென்ட் முதலீடு.. கடைசி 25 ஓவர் ரொம்ப முக்கியம்..!!

என் முதலீட்டுத் தொகுப்பு பங்குகள், கடன் பத்திரங்கள், பணம் (வைப்பு நிதி), தங்கம், ரியல் எஸ்டேட் மற்றும் Annuity ஆகியவற்றை உள்ளடக்கியது என்றதும் பலர் ஒவ்வொண்ணும் எவ்வளவு வளர்ச்சி தருது (CAGR) என்று கேட்கின்றனர். ஓய்வுக்கான சேமிப்பு / முதலீடு ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் பாதியைப் போன்றது.

கிரிக்கெட்டில் எதிர் அணி நமக்கான இலக்கை நிர்ணயிக்கிறது. வாழ்க்கையில் நம்முடைய லைப் ஸ்டைல் மற்றும் பணவீக்கம் நம்முடைய இலக்கை நிர்ணயிக்கிறது. இதுதான் ஓய்வு காலத்தில் தேவைப்படும் கார்பஸ் தொகை.

கிரிக்கெட்டில் இலக்கை அடைய 50 ஓவர்கள் உள்ளன. நம் வாழ்வில் இலக்கை அடைய சேமித்து அதை முதலீடு 30-40 ஆண்டுகள் உள்ளன.
கிரிக்கெட்டில் இலக்கை அடைய முற்படும் போது ஆட்டமிழக்கலாம். 10 விக்கெட்கள் விழும் முன் இலக்கை அடைந்தால் வெற்றி. முதலீட்டில் பங்குச் சந்தை வீழ்ச்சி, தவறான முதலீட்டு முடிவுகள் என வரும் இடைஞ்சல்களும் விக்கெட்கள் போன்றவையே.

கிரிக்கெட்டில் 25 ஓவர்களில் நாம் சேர்த்த ரன்கள் வட்டியோ வளர்ச்சியோ தருவதில்லை. அடுத்த 25 ஓவர்களில் நாம் குவிக்கப் போகும் ரன்கள் மட்டுமே இலக்கை அடைய உதவும். வாழ்க்கையில் நாம் செய்த முதலீடும் வளரும் ஓய்வு பெரும் வரை செய்யும் சேமிப்பு அது தரும் வளர்ச்சியும் நம் இலக்கை அடைய உதவும்.

கிரிக்கெட்டில் 25 ஓவர்களுக்கு அப்புறம் இதுவரை நம்முடைய Run Rate என்ன என்பது முக்கியமில்லை, அடுத்த 25 ஓவர்களில் தேவையான ரன் ரேட் என்ன என்பது மட்டுமே முக்கியம். அதுக்கு நம்மிடம் எத்தனை விக்கெட்கள் உள்ளன, நம்மால் எவ்வளவு ரிஸ்க் எடுக்க முடியும், இலக்கு சுலபமா இருந்தால் ரிஸ்க் எடுக்காமலே இலக்கை அடைய முடியுமா என்பது தான் நம்முடைய Strategy ஆக இருக்க வேண்டும்.

அதே போல இதுவரை நம்முடைய முதலீட்டின் வளர்ச்சி என்ன என்பது முக்கியமல்ல. இலக்கை அடைய முதலீடும் சேமிப்பும் எத்தனை சதவீதம் வளர வேண்டும் என்பதே முக்கியம். அது தெரிந்தால்தான் நம்முடைய போர்ட்போலி-வை சரியாக ரீபேலென்ஸ் செய்ய முடியும். தேவைக்கு அதிகமான ரிஸ்க் எடுக்காமல் இருக்கவும் முடியும்.

நான் இன்னும் 12 ஆண்டுகளில் ஓய்வு பெறணும், ஓய்வு பெறும் போது கையிருப்பு எவ்வளவு வேண்டும் என்பதை முடிவு செய்திருக்கிறேன். அவ்விலக்கை அடைய என்னுடைய இன்றைய Complete Portfolio தோராயமாக 6 % வளர்ந்தால் போதும். அதற்கு பங்குசார் முதலீடு 9-10% வளர்ச்சி தந்தால் போதும். எனவே நான் Large Cap அல்லது Midcap பங்குகள் / மியூச்சவல் பண்ட் தேர்ந்தெடுத்தால் போதும், அதிக வளர்ச்சி / அதிக ரிஸ்க் பாதிப்பு கொண்ட பங்குகள் தேவையேயில்லை.

நான் ஆண்டுக்கு ஒருமுறை (அதிகபட்சமாக இருமுறை) போர்ட்போலியோவை பார்ப்பேன், அங்கிருந்து இலக்கை அடைய தேவையான வளர்ச்சி விகிதத்தைப் பார்ப்பேன். அது சென்ற ஆண்டை விட அதிகமாக இருந்தால் பங்குசார் முதலீட்டை அதிகரித்து மற்றதைக் குறைப்பேன். சென்ற ஆண்டைப்போலவே இருந்தால் ஒரு மாற்றமும் செய்ய மாட்டேன், சென்ற ஆண்டை விடக்குறைந்திருந்தால் பங்குசார் முதலீட்டு சதவீதத்தைக் குறைப்பேன். அத்தோட அந்த Excel Sheet மூடிவைத்து விட்டு வேலையைப் பார்க்கப் போயிடுவேன்.

நீங்கள் பங்குச் சந்தையில் Trader ஆக செயல்பட்டு வருமானம் ஈட்டுபவராக இருந்தால் பங்குச் சந்தையின் அன்றாட செயல்பாடு உங்களுக்கு Relevant. நீங்க ஓய்வுக்காக சேமிக்கும் நீண்டகால முதலீட்டாளராக இருந்தால் தினசரி ஏற்ற இறக்கங்கள், இன்றைய CAGR உங்களுக்கு முற்றிலும் Irrelevant என அவருடைய பதிவை முடித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+