சென்னை: தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக திராவிட கட்சிகள் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த கட்சிகள் நீண்ட காலமாக பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கான அதிகாரம் வழங்குவதில் நாட்டின் பிற மாநிலங்களை காட்டிலும் முன்னோடியாக உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் தமிழ்நாடு அரசு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தை மறுசீரமைத்திருக்கிறது.
தமிழக அரசு சார்பில் டாக்டர் முத்துலட்சுமி திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்காக நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த திட்டத்தில் சில மாற்றத்தை அரசு கொண்டுவந்துள்ளது. அவை என்ன என்பது குறித்து பார்ப்போம்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்து பொருட்களும், நிதி உதவியும் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் மூலம் கர்ப்பிணி பெண்கள் அனைவரும் தங்களின் குழந்தையை நல்ல முறையில் பெற்றெடுக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு நிதி உதவிகள் அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தினை பயன்படுத்த கர்ப்பிணி பெண்கள் தாங்கள் கருவுற்ற நாளிலிருந்து 12 வாரத்திற்குள் அருகில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று தங்களது விவரங்களை கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த திட்டத்தில் பதிவு செய்ய நீங்கள் முக்கிய ஆவணங்களாக உங்களது ஆதார் கார்டு மற்றும் பேங்க் பாஸ்புக்கை எடுத்துக்கொண்டு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் செல்லலாம்.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் கடந்த மார்ச் 31ஆம் தேதி வரை 5 தவணைகளாக நிதி உதவி அளிக்கப்பட்டது. ஆனால் ஏப்ரல் 1 ஆம் தேதி தேதி முதல், இந்த தவணையை மூன்று தவணைகளாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களுக்கும் ரூ. 14,000 ரூபாய் நிதி உதவி அளிக்கப்படுகிறது. மேலும் ஊட்டச்சத்து பொருட்கள் ரூ. 4000 த்திற்கு வழங்கப்படுகிறது. அவர்களுக்கு கர்ப்ப காலத்தில் உதவியாக இருக்கும் வகையில் அரசு இந்த திட்டத்தினை அறிமுகம் செய்தது.
இந்த நிதி உதவியானது, கர்ப்பிணி பெண்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பதிவு செய்த உடனே ரூ. 2000 அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும். இரண்டாவது தவணை ரூ. 2,000 கர்ப்பிணி பெண்களின் 4 வது மாதத்தில் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும். மூன்றாவது தவணையாக குழந்தை பெற்ற பிறகு ரூ.4000 வரவு வைக்கப்படும். நான்காவது தவணை குழந்தைகளுக்கு முதல் தடுப்பூசி போடும் போது ரூ.4,000 வங்கி கணக்கில் செலுத்தப்படும். மேலும் ஐந்தாவது தவணையான ரூ.2000 குழந்தைக்கு 9 மாதம் கழித்த பின்னர் தமிழக அரசு வழங்கும். எனவே மொத்தம் ஐந்து தவணைகளாக 14,000 ரூபாய் வழங்குகிறது. ஆனால் தமிழக அரசு இப்பொழுது இந்த திட்டத்தில் சிறிய மாற்றத்தை செய்துள்ளது. மேலும் ஊட்டச்சத்து பொருட்களான சத்துமாவு, மருந்துகள், திராட்சை, நெய், துண்டு போன்ற பொருட்கள் இரண்டு முறை வழங்கப்படும். அதாவது ஒவ்வொரு தவணையிலும் 2000 ரூபாய் மதிப்புள்ள ஊட்டச்சத்து பொருட்களை அரசு வழங்குகிறது.
ஆனால் ஏப்ரல் 1ஆம் தேதிக்குப் பிறகு, இந்தத் திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஐந்து தவணைகளாக வழங்கிய நிதி உதவி இப்பொழுது மூன்று தவணைகளாக வழங்கப்பட உள்ளது. 4வது மாதத்தில் ரூ. 6000 ரூபாயும், குழந்தை பெற்றெடுத்தபின் ரூ. 6,000 ரூபாயும், குழந்தைக்கு 6 மாதம் முடிந்தவுடன் ரூ. 2,000 ரூபாயும் வங்கியில் வரவு வைக்கப்பட உள்ளது. மேலும் மூன்றாவது மற்றும் ஆறாவது மாதத்தில் ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications