சென்னை: 2023-2024 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் மோட்டார் வாகன விற்பனை மிகவும் உயர்ந்துள்ளதாக ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கம் (FADA) தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டை விட 10 சதவீதம் மோட்டார் வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. பல்வேறு வகையான வாகனங்களை விற்பனை செய்யும் தொழில் சிறப்பாக செயல்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
முதல் முறையாக இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் யூட்டிலிட்டி வாகனங்களுக்கான (SUV) கார்கள் 50 சதவீத சந்தை பங்களிப்பைக் கொண்டுள்ளது என ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கார் உற்பத்தியாளர்கள் மார்ச் மாதத்தில் பல்வேறு சொகுசு கார்களுக்கு அதிக தள்ளுபடிகளை வழங்கி உள்ளனர். இதனால் கார் விற்பனை கணிசமான ஏற்றத்தைக் கண்டுள்ளது. மேலும் 2023-2024 ஆம் ஆண்டில் வாகன சில்லறை விற்பனை 10.29 சதவீதம் அதிகரித்துள்ளது.

2023-2024 ஆம் நிதியாண்டில் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து 2,45,30,334 யூனிட்களாக உள்ளது. இது முந்தைய 2022-2023 ஆம் நிதியாண்டில் விற்பனை செய்யப்பட்ட மோட்டார் வாகனங்களோடு ஒப்பிடுகையில் 2,22,41,361 யூனிட்கள் ஆகும். இது மிக பெரிய வளர்ச்சி ஆகும்.
பயணிகள் வாகனங்கள் (PV): மார்ச் மாதம் 2024 ஆம் ஆண்டில் 6 சதவீத சரிவை சந்தித்து, பயணிகள் வாகனங்கள் 3,22,345 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது 6 சதவீதம் குறைவு. போன வருடம் பயணிகள் வாகனங்கள் 3,43,527 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன.
இரு சக்கர வாகனங்கள்: இரு சக்கர வாகனங்கள்,மார்ச் 2024 ஆம் ஆண்டில், 5 சதவீதம் அதிகரித்து 15,29,875 யூனிட்களை எட்டியுள்ளது, இது கடந்த 2023 ஆம் ஆண்டின் இதே காலக்கட்டத்தில் ஒப்பிடும்போது 14,50,913 யூனிட்களாக இருந்தது.மக்கள் தொடர்ந்து அதிக இரு சக்கர வாகனங்கள் வாங்குவதனால் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சந்தைக்கு புதிய மாடல்களின் வரத்து அதிகமானதால் இந்த உயர்வு ஏற்பட்டிருக்கலாம்.
மூன்று சக்கர வாகனங்கள்: மார்ச் 2024 ஆம் ஆண்டில், மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை முந்தைய ஆண்டை விட குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது. இது 17 சதவிகித அதிகரிப்புடன் 1,05,222 யூனிட்களை எட்டியது.
கமர்சியல் வாகனங்கள் (CV): மார்ச் 2024 ஆம் ஆண்டில் CV விற்பனையில் 6% சரிவு ஏற்பட்டுள்ளது. மார்ச் 2023 ஆம் ஆண்டில் இந்த வாகனங்கள் 96,984 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டது. இந்தியாவின் போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் அமைப்புகளுக்கு இந்த வாகனங்கள் மிக முக்கியமான ஒன்றாகும்.
டிராக்டர்கள்: டிராக்டர்கள் மார்ச் 2024 ஆம் ஆண்டில் 3 சதவீதம் குறைந்துள்ளது, 78,446 யூனிட்கள் விற்கப்பட்டன. இந்த சரிவு இருந்த போதிலும், இந்தியாவின் விவசாயத் துறை மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தை ஆதரிப்பதில் டிராக்டர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்தியா மிகவும் நிலையான போக்குவரத்து மற்றும் தொழில்நுட்பத்தை நோக்கி நகரும் போது, இந்த விற்பனை எண்கள் வாகனத் துறையின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தைக் காட்டுகின்றன.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications