ஆர்ஜி சந்திரமோகனின் வாழ்க்கைச் சரிதம் ஆச்சரியத்தை தரக்கூடியது. 1970 ஆம் ஆண்டு அவர் ஐஸ் கிரீம் வியாபாரத்தை தொடங்கினார். 2023இல் அவரது நிகர சொத்து மதிப்பு 2.3 பில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் ரூ.19077 கோடி ஆகும். ஹட்சன் அக்ரோ ப்ராடக்ட் லிமிடெட்டின் தலைவர் அவர்.
விற்பனையில் நாட்டிலேயே பெரிய தனியார் பால் பொருட்கள் நிறுவனங்களுள் ஒன்று. இந்தியாவில் மிகப் பெரிய பணக்காரர்களில் சந்திரமோகனும் ஒருவர். ஐஸ்கிரீம் உற்பத்தியாளர்களில் மிகப் பெரிய பணக்காரர்.

10 ஆயிரம் கிராமங்களைச் சேர்ந்த 4 லட்சம் விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்யப்படுகிறது. பால் தயாரிப்புகளில் 42 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
சந்திரமோகன் சென்னையை சேர்ந்தவர். அவரது எண் புலமையால் மனித கம்ப்யூட்டர் என்று அழைக்கப்படுகிறார்.
அவரது தந்தை ஒரு சிறிய மளிகை கடை வைத்திருந்தார். ஒரு மரக்கடையில் மாதச் சம்பளம் ரூ.65 பெற்று வேலை செய்து கொண்டிருந்தார். வெறும் 3 வேலையாட்களை வைத்து அவரது ஐஸ்கிரீம் தொழிலை தொடங்கினார். 15 தள்ளுவண்டிகள் மூலம் தனது ஐஸ்கிரீம்களை விற்று வந்தார். ஆரம்பகட்ட முதலீடு ரூ.13000.
1981 ஆம் ஆண்டில் அவர் அருண் ஐஸ்கிரீமை தொடங்கினார். கிராமப்புறங்களில் அவர் கவனம் செலுத்தினார். ஹட்சன் நிறுவனத் தலைவராக சந்திரமோகன் உள்ளார். அவரது மகன் சத்யன் நிர்வாக மேலாளராக உள்ளார்.
வெளிநாட்டு நிறுவனங்களுடன் அருண் ஐஸ்கிரீம் தயாரிப்புகள் கடும் போட்டியைத் தருகின்றன. பாஸ்கின் ராபின்ஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்களால் அருண் ஐஸ்கிரீமுடன் போட்டியிட முடியவில்லை.
ஆந்திராவின் ஹெரிடேஜ் ஐஸ்கிரீம் அருண் ஐஸ்கிரீமுக்கு சவாலைத் தருகிறது. ஆனால் விதவிதமான அருண் ஐஸ்கிரீம் தயாரிப்புகளுக்கு ஹெரிடேஜால் ஈடு கொடுக்க முடியவில்லை.
மதுரையை சேர்ந்த ஸ்டேட் ஐஸ்கிரீமின் வெண்ணிலா ஐஸ்கிரீம் மிகவும் பிரபலமானது. மக்கள் அதை விரும்பி சாப்பிடுவார்கள். அதற்கு இணையாக அருண் ஐஸ்கிரீமும் வெண்ணிலா பாரை தயாரித்து விற்கிறது. ஸ்கூப் போன்ற பல புதிய ஐஸ்கிரீம் நிறுவனங்களும் போட்டியாக நுழைந்துள்ளன. ஆனால் அருண் ஐஸ்கிரீமின் சுவைக்கு நிகராக இல்லை.


Click it and Unblock the Notifications