இந்தியா வேண்டாம்.. வெளிநாட்டுக்கு படையெடுக்கும் பணக்காரர்கள்.. அப்படி எங்க போறீங்க..?!

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, வர்த்தக வாய்ப்புகள் என அனைத்தும் சிறப்பாக இருக்கும் வேளையிலும் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் இருக்கும் பெரும் பணக்காரர்கள் இந்திய குடியுரிமையை விட்டு வேறு நாடுகளுக்கு பல்வேறு காரணத்திற்றாக குடிபெயர்கின்றனர்.

அப்படி இந்திய குடியுரிமையை விடுத்து வெளிநாட்டுக்கு செல்லும் பலர் கொரோனா தொற்று காலத்தில் உயர் தர மருந்து வசதிகளின் தேவைக்காக செல்வதாக கூறினர். அடுத்த சில வருடத்தில் வரி சலுகை, வர்த்தக வாய்ப்புகள், வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புகள், பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் என காரணங்கள் காலத்திற்கு ஏற்ப மாறிக் கொண்டே வருகிறது.

இந்தியா வேண்டாம்.. வெளிநாட்டுக்கு படையெடுக்கும் பணக்காரர்கள்.. அப்படி எங்க போறீங்க..?!

இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான Henley Private Wealth Migration Report தற்போது வெளியாகியுள்ளது, இந்த ஆய்வறிக்கையின் படி இந்த ஆண்டு குறைந்த பட்சம் 6500 பணக்கார இந்தியர்கள் இந்தியாவை விட்டு வேறு நாடுகளுக்கு குடியேறுவார்கள் என தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டில் இந்தியாவை விட்டு வெளியேறியவர்கள் எண்ணிக்கை 7500 கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 2023 எண்ணிக்கை குறைந்துள்ளது. உலகளவில் சொத்து மற்றும் முதலீடுகளின் நகர்வை ஆழ்ந்து கவனித்து அதுக்குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யும் நிறுவனமாக உள்ளது Henley.

இந்த நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டும் பணக்காரர்கள் (HNI) 1 மில்லியன் டாலருக்கும் அதிகமாக சொத்து வைத்திருப்பவர்கள். 1 மில்லியன் டாலர் எனில் இந்திய ரூபாய் மதிப்பு படி 8.3 கோடி ரூபாய்.

Henley வெளியிட்ட ஆய்வறிக்கையில் இந்த ஆண்டு சீனாவில் இருந்து 13500 பேரும், இந்தியாவில் இருந்து 6500 பேரும், பிரிட்டன் நாட்டில் இருந்து 3200 பேரும், ரஷ்யாவில் இருந்து 3000 பேரும் அவரவர் சொந்த நாட்டை விட்டு வெளியேற உள்ளனர் என தெரிவித்துள்ளாது.

இந்தியர்களை பொருந்த வரையில் அதிகப்படியானோர் குடும்பத்துடன் செட்டிலாக வேண்டும் என நினைக்கும் பகுதிகளில் துபாய், சிங்கப்பூர் முதன்மையாக உள்ளது. இந்த நாடுகளில் அளிக்கப்படும் கோல்டன் விசா, வரி சலுகைகள் இந்திய மக்களை அதிகளவில் ஈர்க்கிறது.

இந்தியாவில் தற்போது சுமார் 3,57,000 HNI-கள் உள்ளனர், இந்த எண்ணிக்கை 2031ல் சுமார் 80 சதவீதம் வரையில் உயர வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டு உள்ளது. மேலும் உலகளவில் இருக்கும் பெரும் பணக்காரர்கள் வேறு நாட்டுக்கு குடியேற வேண்டும் என திட்டமிட்ட பின்பு இதை எளிதாக்கும் அல்லது வேகமாக குடியுரிமை பெற வாய்ப்பு அளிக்கும் நாடுகள் பட்டியலில் 2023 ஆம் ஆண்டில் முதல் இடத்தில் இருப்பது போர்ச்சுகல், இதேபோல் போர்ச்சுகல் கோல்டன் விசாவும் பிரபலமாக உள்ளது.

போர்ச்சுகல் நாட்டை தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் முதலீட்டு வாயிலான குடியுரிமை, இதை தொர்ந்து முதலீட்டு திட்டத்தின் வாயிலாக கிடைக்கும் St Kitts and Nevis குடியுரிமை பிரபலமாக உள்ளது.

டாப் 3 இடத்தை தாண்டி கனடா நாட்டில் ஸ்டார்ட்-அப் விசா திட்டம், இத்தாலி நாட்டின் முதலீட்டு வாயிலான குடியுரிமை திட்டம், கிரீஸ் நாட்டின் கோல்டன் விசா, ஸ்பெயின் நாட்டின் முதலீட்டு வாயிலான குடியுரிமை திட்டம் ஆகியவை அடுத்தடுத்து இடங்களை பிடித்துள்ளது.

மேலும் 2023 ஆம் ஆண்டில் அதிகளவில் வெளிநாட்டு பணக்காரர்களை ஈர்க்கும் நாடுகள் பட்டியலில் 5200 பேர் உடன் ஆஸ்திரேலியா முதல் இடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியாவை தொடர்ந்து ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், அமெரிக்கா, சுவிஸ், கனடா, கிரீஸ், பிரான்ஸ், போர்ச்சுகல், நியூசிலாந்து ஆகியவை டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இப்பட்டியலில் இருந்து இஸ்ரேல் வெளியேறியுள்ளது முக்கியமாக பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+