பணக்கார நாடு, ஏழை மக்கள்.. இந்தியாவின் உண்மையான முகம் இதுதான்..!!

இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தாலும் சில முக்கியமான விஷயங்களை கவனிக்க வேண்டியது கட்டாயம். சமீபத்தில் IMF வெளியிட்டுள்ள ஏப்ரல் மாத ஜிடிபி மதிப்பீட்டின்படி, இந்தியாவின் பொருளாதார அளவு 4,187.02 பில்லியன் டாலர்களாகவும், ஜப்பானின் பொருளாதாரம் 4,186.43 பில்லியன் டாலர்களாகவும் உள்ளது என கணித்துள்ளது.

இதன் மூலம், இந்திய பொருளாதார ஜப்பானை முந்தி உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த எண்ணிக்கைகள் 2025-26 நிதியாண்டிற்கான மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டவை.

பணக்கார நாடு, ஏழை மக்கள்.. இந்தியாவின் உண்மையான முகம் இதுதான்..!!

உண்மையில் தற்போது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 3.9 டிரில்லியன் டாலர்களாகவும், ஜப்பானின் GDP 4 டிரில்லியன் டாலர்களாகவும் உள்ளது. மார்ச் காலாண்டு GDP புள்ளிவிவரங்கள் மே 30 அன்று வெளியாகும்போது, இந்த கணக்கீடுகள் மாற வாய்ப்புள்ளது. சரி இதில் என்ன பிரச்சனை என நீங்கள் கேட்கலாம். மிகப்பெரிய பிச்சனை உள்ளது.

2022 உலக ஏற்றத்தாழ்வு அறிக்கையின்படி, இந்தியாவில் முதல் 1% மக்கள் அதாவது பெரும் பணக்காரர்கள், இந்தியாவின் மொத்த செல்வத்தில் 40% இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. மக்கள் தொகையில் கீழ்தட்டில் இருக்கும் 50% மக்களிடம் வெறும் 3% செல்வத்தை மட்டுமே வைத்துள்ளனர்.

இந்த நிலையில் இந்தியாவின் தனிநபர் வருமானம் சராசரியாக கணக்கிட்டால் ஆண்டுக்கு 2,880 டாலராக உள்ளது. இந்த தனிநபர் வருமானம் தான் ஒரு நாட்டின் மக்கள் எந்த அளவுக்கு செல்வ செழிப்பாக இருக்கிறார்கள் என்பதையும், பொருளாதார ரீதியாக ஏற்றதாழ்வு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதையும் காட்டும்.

இப்படி பார்க்கும் போது முதல் 1% மக்களை நீக்கினால், இந்திய மக்களின் தனிநபர் வருமானம் என்பது 1,670 டாலர் மட்டுமே. இதை புள்ளிவிபர அடிப்படையில் சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவின் மொத்த ஜிடிபி 3.9 டிரில்லியன் டாலர், இதில் 40 சதவீதம் என்றால் 1.56 டிரில்லியன் டாலர். அப்படியானால் 99 சதவீத மக்கள் கிட்டத்தட்ட 140 கோடி மக்கள் தொகையின் மொத்த ஜிடிபி மதிப்பு வெறும் 2.34 டிரில்லியன் டாலர். இதை தனிநபர் வருமானமாக கணக்கிட்டால் வெறும் 1,670 டாலர் மட்டுமே.

இதை தொடர்ந்து முதல் 5% மக்களை நீக்கினால் 1,100 டாலர் மட்டுமே. இதை ரூபாய் மதிப்பில் கணக்கிட்டால் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவாக உல்ளது. இதனாலேயே மத்திய மாநில அரசுகள் இணைந்து நாடு முழுவதும் 80 கோடி மக்களுக்கு இலவச உணவு பொருட்களை ரேஷன் கடைகள் வாயிலாக வழங்க வேண்டிய நிலை உள்ளது.

இந்தியா பொருளாதார அடிப்படையில் உலகளவில் 4வது இடத்தில் இருந்தாலும் எழை மக்கள் அதிகம் இருக்கும் நாடாக உள்ளது. இந்தியா மட்டும் தான் இப்படியா..? மற்ற நாடுகளின் நிலைமை என்ன..? ஜப்பானுக்கும், இந்தியாவுக்கும் மத்தியில் என்ன வித்தியாசம்..?

இந்தியாவின் மக்கள்தொகை 146 கோடியாகவும், ஜப்பானின் மக்கள்தொகை 12.3 கோடியாகவும் உள்ளது. இந்தியாவின் தனிநபர் வருமானம் 2,880 டாலர்கள், ஆனால் ஜப்பானின் தனிநபர் வருமானம் 33,900 டாலர்களாக உள்ளது. மக்கள் தொகையால் இந்த வித்தியாசம் ஏற்றபட்டு இருக்க கூடும் என நினைக்கலாம், ஆனால் இல்லை.

இந்தியாவின் மக்கள் தொகைக்கு இணையாக இருக்கும் சீனா 4 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக இருந்தபோது, அதன் தனிநபர் வருமானம் 3,500 டாலர்களாக இருந்தது. இன்று, சீனாவின் தனிநபர் வருமானம் என்பது 13,000 டாலர்களாக உயர்ந்து, இதன் மூலம் அந்நாட்டின் ஜிடிபி 19.23 டிரில்லியன் டாலர்களாக உள்ளது. சீனாவை ஒப்பிடும் போதும் இந்தியாவின் தனிநபர் வருமானம் 620 டாலர் குறைவாக உள்ளது.

அமெரிக்காவின் பொருளாதாரம் 30.51 டிரில்லியன் டாலர்களாகவும், தனிநபர் வருமானம் 89,000 டாலர்களாகவும் உள்ளது. இந்தியா, ஜப்பான் மற்றும் ஜெர்மனியை (4.74 டிரில்லியன் டாலர்கள்) முந்தினாலும், தனிநபர் வருமானத்தில் பெரிய மாற்றம் இருக்காது என்பதே தற்போதைய பிரச்சனை.

இந்திய மக்களின் தனிநபர் வருமானம் உயர்த்தப்பட வேண்டும் என்றால் முதலில் அனைத்து தரப்பு மக்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கப்பட வேண்டும். இதன் பின்பு கல்லி, உணவு போன்ற அடிப்படை விஷயங்கள் எவ்விதமான தடையுமின்றி கிடைக்கப்பட வேண்டும். இதை எட்டிய பின்பு நாட்டின் உற்பத்தி, ஏற்றுமதி, வர்த்தகம் என அனைத்தும் முன்னேறும். இதேவேளையில் இந்திய அரசு உயர் தொழில்நுட்பத்திலும், இன்னோவேஷனிலும் அதிகம் முதலீடு செய்ய வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+