கிரிப்டோ கரன்சி மார்க்கெட்டில் ஒருவர் திடீரென கோடிக்கணக்கில் சம்பாதித்து குபேரனாக மாறலாம் அல்லது சம்பாதித்த அத்தனையையும் இழந்து ஆண்டியாகவும் போய்விடலாம்.
கிரிப்டோ கரன்சிக்கு கடந்த ஆண்டு கரடி சந்தையாக இருந்ததால் மிகப் பெரிய சோதனைக் காலமாக இருந்தது. கடுமையாகத் தாக்குப்பிடிக்கக் கூடிய முதலீட்டாளர்கள் கூட இந்த சூறாவளிப் புயலை தாக்குப்பிடிக்க முடியாமல் ஒரே இரவில் காணாமல் போய்விட்டனர்.

கிரிப்டோ சந்தையில் பெரும் சொத்து மதிப்பை இழந்தது மட்டும் அல்லாமல் பல லட்சம் மக்களின் முதலீட்டில் திருடி மாட்டிக்கொண்டவர் SBF எனப்படும் Sam Bankman-Fried. அவரது சொத்துகள் சந்தையின் இறக்கத்தால் சின்னா பின்னமாகி விட்டன. இருப்பினும் குறிப்பிட்ட சில கிரிப்டோ பில்லியனர்கள் இந்த சேதத்துக்கு ஆளாகாமல் தப்பித்ததோடு கொஞ்சம் சம்பாதிக்கவும் செய்தனர். இப்படி உலகின் டாப் 7 கிரிப்டோ பில்லியனர்கள் பற்றிதான் இப்போது பார்க்கப்போகிறோம்.
1. எலான் மஸ்க்
சொத்து மதிப்பு சுமார் 230 பில்லியன் டாலர்கள்.
எந்தவொரு கிரிப்டோ கம்பெனியுடனும் கூட்டு வைக்காமல் கிரிப்டோ உலகில் எலான் மஸ்கின் ஆதிக்கம் மறுக்க முடியாத ஒன்றாகும். கனடா நாட்டை சேர்ந்த இந்த பில்லியனர் பிட்காயின், டோஜ்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிக்கு உரக்க ஆதரவு அளித்தவர். டெஸ்லாவின் வசம் உள்ள கிரிப்டோ பங்குகள் மஸ்கின் அந்தஸ்தை கிரிப்டோ சமூகத்தில் வலுவாக நிலைநிறுத்தியுள்ளது. டோஜ்காயின் உடன் உள்ள தொடர்பு பற்றிய அவரது டுவிட்டர் அதன் சாத்தியமான பயன்பாடுகள் பற்றிய சூழ்ச்சியை ஏற்படுத்தியது.
அவர் சோசியல் மீடியாவை பைனான்சியல் சர்வீஸ்கள் மூலமாக மறு அமைப்பு செய்யும்போது கிரிப்டோ உலகில் மஸ்கின் சொத்துகள் மற்றும் ஆதிக்கம் வலுவாகவே உள்ளது.
2. சாடோஷி நாகமோட்டோ
சொத்து மதிப்பு சுமார் 30-70 பில்லியன் டாலர்கள்
வருமான ஆதாரம்- பிட்காயின்
பிட்காயினை உருவாக்கியவரின் நிலைமை மர்மங்களை ஏற்படுத்தினாலும் அதன் விளைவுகள் கிரிப்டோ உலகில் கணக்கிட முடியாத அளவு உள்ளது. சாடோஷி நாகமோட்டாவிடம் 1 மில்லியன் பிட்காயின்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது பற்றி ஆன்-செயின் ஆய்வு கூறுகையில் பிட்காயினின் தொடக்கக் காலத்திலேயே சாடோஷி அதிகளவில் சம்பாதித்துள்ளார். சந்தை ஏற்றத்துடன் இருக்கும்போது 70 பில்லியன் டாலர்கள் வரை வருமானம் இருந்திருக்கலாம்.
3. சாங்பெங்க் ஜாவோ
சொத்து மதிப்பு சுமார் 10 பில்லியன்
ஆதாரம்- பினான்ஸ்
கனடாவை சேர்ந்த சாங்க்பெங்க் ஜாவோ பினான்ஸை உலகின் பிரீமியர் கிரிப்டோ கரன்சி வர்த்தகமாக்கினார். மெக்கில் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்த சாங்க்பெங்க் ஒரு குடியேறியாக இருந்து கிரிப்டோ இண்டஸ்ட்ரியில் பில்லியனராக ஆகியுள்ளார். சந்தை ஏற்றத்தில் இருந்தபோது சுமார் 60 பில்லியன் டாலர்களை குவித்துள்ளார். கிரிப்டோ பரப்பை மாற்றியதற்கு சாங்க்பெங்கின் பங்கை மறுக்க முடியாது.
4. பிரையன் ஆர்ம்ஸ்ட்ராங்
நிகர சொத்து மதிப்பு 3.6 பில்லியன்
ஆதாரம்- காயின்பேஸ்
அமெரிக்காவை சேர்ந்த பிரையன் ஆர்ம்ஸ்ட்ராங் காயின்பேஸின் நிறுவனர். மக்களுக்கு கிரிப்டோகரன்சியை அணுகுவதற்கு முன்னின்றார். காயின்பேஸின் ஐபிஓ கிரிப்டோவை ஏற்கத்தக்கதாக மாற்றியது. அதன் மதிப்பு 100 பில்லியன் டாலர்களாகும். ஒழுங்குமுறை மாற்றங்கள், சந்தை மாற்றங்கள் இருந்தபோதும் காயின்பேஸை மோசமான சூழ்நிலைகளில் இருந்து ஆர்ம்ஸ்ட்ராங் திறமையாக மீட்டெடுத்தார்.
5. கிறிஸ் லாரென்
நிகர சொத்து மதிப்பு 2.6 பில்லியன்
ஆதாரம்- ரிப்பிள் இணை நிறுவனர்
சிலிக்கான் பள்ளத்தாக்கு தொழிலதிபரான கிறிஸ் லாரெனின் வளர்ச்சி அவரை கிரிப்டோ முதலீடுகள் ரிப்பிள் இணை நிறுவனராக ஆக்கியது.
ரிப்பிள் எக்ஸ்ஆர்பி டோக்கன் தொடர்பான வழக்குகள் லாரெனின் வளர்ச்சியை முடக்கியது. அவரது சொத்து மதிப்பு 2.6 பில்லியனாக உள்ளது. கஷ்டமான காலத்திலும் அவர் திடமாக இருந்தார்.
6. ஜெட் மெக்காலப்
நிகர சொத்து மதிப்பு 2.3 பில்லியன்
ஆதாரம்- ரிப்பிள் இணை நிறுவனர்
தனது ரிப்பிள் லேப்ஸ் மூலம் பல கிரிப்டோ வருவாய்களை ஜெட் மெக்காலப் பெற்றார். ஸ்டெல்லார் லுமென்ஸ் ப்ராஜக்டில் அவருக்கு தொடர்பு உள்ளது. பிட்காயின் எக்ஸ்சேஞ்ச் மவுன்ட் காக்ஸ் தொடக்கக்காலத்தில் அவரது கிரிப்டோ பயணத்தில் வெற்றிகளையும் சோதனைகளையும் தந்தது.
7. நிகில் விஸ்வநாதன்
நிகர சொத்து மதிப்பு 1.8 பில்லியன்
ஆதாரம்- ஆல்கெமி இணை நிறுவனர் (Alchemy)
ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் படித்ததில் இருந்து பிரபல ப்ளாக்செயின் சாப்ட்வேர் நிறுவனமான ஆல்கெமியின் இணை நிறுவனர் ஆவதுவரை அவரது பயணம் அமைந்தது. மதிப்பு சற்று குறைந்ததால் அவரது சொத்து 2.4 பில்லியனாக சரிந்தது. கிரிப்டோ உலகில் விஸ்வநாதனின் மைக்ரோசாப்ட் பிளாக்செயின் அவரது சக்தியை தக்கவைத்தது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications