ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் அனில் அம்பானி, அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி போன்ற நம் நாட்டை சேர்ந்த மெகா கோடீஸ்வரர்கள் பற்றி நமக்கு தெரியும். அதேசமயம் நம் நாட்டில் இருந்து வெளிநாட்டுக்கு சென்று பெரும் பணக்காரர்களாக உயர்ந்தவர்கள் பற்றி நமக்கு அதிகம் தெரியாது.
பல இந்தியர்கள் இப்போது நம் நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் வர்த்தகங்களில் கொடி கட்டி பறக்கின்றனர். அவர்களில் ஒருவர் தான் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய பணக்காரர் விவேக் சாந்த் சேகல்.

வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் மதர்சன் குழுமத்தின் தலைவர் மற்றும் இணை நிறுவனர் தான் இந்த விவேக் சாந்த் சேகல். மதர்சன் குழுமம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் செயல்பட்டு வருகிறது.
விவேக் சாந்த் சேகல் ஆரம்பத்தில் வெள்ளி வர்த்தகத்தில் தான் ஈடுபட்டார். பின்பு வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். விவேக் சாந்த் சேகலின் தாத்தா ஒரு பிரபலமான நடைக்கடைக்காரர். விவேக் சாந்த் சேகல் 18 தனது வயதில் வெள்ளி வர்த்தகத்தில் களம் இறங்கினார்.
ஒரு கிலோ வெள்ளியை ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்து வர்த்தகத்தை தொடங்கினார். 1970களில் ஆரம்பத்தில் விவேக் சாந்த் சேகல் மாதம் ரூ.2,500 சம்பாதித்தார். வெள்ளி வர்த்தகம் மற்றும் முதலீட்டில் உள்ள திறனை கண்டு நாமே சொந்தமாக வியாபாரத்தை தொடங்க முடிவு செய்தார்.
1975ம் ஆண்டில் தனது தாயார் ஸ்வரன் லதா சேகலுடன் இணைந்து சொந்தமாக வெள்ளி வர்த்தக நிறுவனமான மதர்சன் நிறுவனத்தை தொடங்கினார். ஆனால் விவேக் சாந்த சேகலின் போதாத காலம், வெள்ளி வர்த்தகம் வீழ்ச்சி கண்டது மற்றும் நிறுவனம் திவால் நிலையை அடைந்தது.
அதற்காக விவேக் சாந்த் சேகல் மனம் உடைந்து மூலையில் அமர்ந்து விடவில்லை. அவரது பார்வை வாகன துறையை பக்கம் திரும்பியது. விவேக் சாந்த் சேகலுக்கு வாகன உதிரிபாகங்களை தயாரித்து விற்பனை செய்தால் என்ன என்ற யோசனை எழுந்தது. இதனையடுத்து விவேக் சாந்த் சேகலின் மதர்சன் குழுமம் வாகன வணிகத்தில் இறங்கியது மற்றும் வாகன உதிரிபாகங்களை உற்பத்தி செய்ய தொடங்கியது.
வாகன உதிரிபாகங்கள் வர்த்தகம் அவரை கைவிடவில்லை. விவேக் சாந்த் சேகலின் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு வர்த்தகம் அவருக்கு பெரும் முன்னேற்றத்தை கொடுத்தது மற்றும் அவரை கடனில் இருந்து மீட்டது. சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் இப்போது முக்கியமான வாகன உதிரிபாகங்களை விற்பனை செய்கிறது. விவேக் சாந்த் சேகலிடம் தற்போது உள்ள செல்வத்தில் பெரும்பகுதி இந்த வர்த்தகம் வாயிலாகவே வந்தது.
விவேக் சாந்த் சேகலின் மதர்சன் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.87 ஆயிரம் கோடிக்கு வர்த்தம் செய்கிறது. போர்ப்ஸ் அறிக்கையின்படி, விவேக் சாந்த் சேகலின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.33,287 கோடியாகும். இதனால் அவர் ஆஸ்திரேலியாவில் வாழும் பணக்கார இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
விவேக் சாந்த் சேகல் தனது நிறுவனத்துக்கு மதர்சன் என்று பெயர் சூட்டியதற்கு ஒரு காரணம் உள்ளது. தனது அம்மாவுடன் இணைந்து வர்த்தகத்தை தொடங்கியதால் நிறுவனத்தின் பெயரை மதர்சன் என்று வைத்தார்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?



Click it and Unblock the Notifications