குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில், மாதாப்பூர் என்ற ஒரு சிறிய கிராமம் உள்ளது. இந்த கிராமம் ஆசியாவிலேயே மிகவும் பணக்கார கிராமமாக பார்க்கப்படுகிறது. மக்கள் தொகையிலும் அளவிலும் பெரியதாக இல்லாவிட்டாலும், தங்களுக்கு தேவைப்படும் நிதி சேமிப்பை இங்குள்ள மக்கள் சேமித்து வைத்திருக்கின்றனர். மாதாப்பூர் கிராமத்தில் 32,000 மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் சுமார் ரூ.7000 கோடி ரூபாய் மதிப்புள்ள பிக்சட் டெபாசிட்களை குவித்து வைத்துள்ளனர்.
மாதாப்பூர் கிராம மக்கள் எப்படி இவ்வளவு செல்வ செழிப்புடன் இருக்கின்றனர்?: மாதாப்பூர் கிராம மக்கள் ஒரே இரவிலோ அல்லது தற்செயலாகவோ இவ்வளவு பெரிய சேமிப்பை அடையவில்லை. இது பல வருட கடின உழைப்பு, சேமிப்பு மற்றும் புத்திசாலித்தனமான நிதி முடிவுகளை எடுத்ததன் விளைவு என்று கூட வைத்துக் கொள்ளலாம். மாதாப்பூர் மக்கள் படேல் சமூகத்தினர். இங்குள்ள மக்கள் தாங்கள் சம்பாதிப்பதில் ஒரு பகுதியை உள்ளூர் வங்கிகளில் சேமித்து வைக்கும் பழக்கத்தை கடைபிடித்துள்ளனர்.

மாதாப்பூர் கிராமத்தில் பெரும்பாலான மக்கள் சுமார் ரூ.22 லட்சம் வரை பிக்சட் டெபாசிட்களில் சேமித்து வைத்துள்ளனர். இது கேட்பதற்கு ஆச்சரியமாக தோன்றலாம். ஆனால் மாதாப்பூர் கிராம மக்கள் பணத்தைச் சேமிப்பதிலும், கவனமாக செலவழிப்பதிலும் மிகவும் திறமையானவர்கள். இங்கு வாழும் மக்கள் நிதி ரீதியாக பாதுகாப்பாக இருப்பதற்காக நீண்ட காலமாக சேமிப்பு பழக்கத்தை கடைபிடித்து வருகின்றனர்.
மாதாப்பூர் கிராமத்தின் அபரிமிதமான செல்வத்திற்கு மற்றொரு முக்கிய காரணங்களில் ஒன்று இந்த கிராமத்தைச் சேர்ந்த NRI-கள். மாதாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பல இந்தியர்கள் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, யூனைடெட் கிங்டம் மற்றும் சிலர் ஆப்பிரிக்க நாடுகள் போன்ற வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர். இந்த NRI-கள் வர்த்தகம், கட்டுமானம் போன்ற முக்கிய வணிகங்களிலும் ஈடுபட்டுள்ளனர். தங்களுடைய தாயகத்திலிருந்து வெகு தொலைவில் வாழ்ந்தாலும் தொடர்ந்து கணிசமான அளவு பணத்தை மாதாபூரில் இருக்கும் தங்கள் குடும்பங்களுக்கு அனுப்புகின்றனர்.
ஒவ்வொரு வருடமும் இந்த NRI-கள் உள்ளூர் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களுக்கு தங்களுடைய வருமானத்தை அனுப்புகின்றனர். இந்த நடைமுறை கிராமத்தின் செல்வத்தை அதிகரிக்க பெரிதும் உதவியுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில் தற்போது மாதாப்பூரில் 17 வங்கிகள் நிறுவப்பட்டுள்ளன. இதில் ஆக்சிஸ் பேங்க், HDFC பேங்க் போன்றவையும் அடங்கும்.
இவ்வளவு செல்வம் எப்படி மாதாப்பூர் கிராமத்திற்கு பயனளித்தது தெரியுமா?: மாதாபூர் கிராமத்திற்கு வரும் பணம் அதன் அடிப்படைத் தேவைகளை மேம்படுத்தவும் உதவியுள்ளது. இன்னமும் பல கிராமங்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் தான் இருக்கிறது. இதற்கு நேர் மாறாக மாதாபூர் கிராமத்தில் நல்ல சாலை, சுத்தமான நீர் வளம், பூங்காக்கள் முறையான சுகாதாரம், பள்ளிகள், கோயில்கள், பொது இடம் என அங்கு வசிக்கும் மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் அனைத்து விஷயங்களும் உள்ளது.
சேமிப்பு பழக்கம் ஒரு சிறிய கிராமத்தையும் மேம்பட வைக்கும் என்பதற்கு மாதாப்பூர் கிராமம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. பெரிய நகரங்கள் செல்வத்திற்கு பெயர் பெற்றிருந்தாலும், மக்கள் கடினமாக உழைத்து பணத்தை சேமித்து வைத்தால் கிராமப்புறங்களிலும் நன்றாக செயல்பட முடியும் என்பதை இங்கு உள்ள கிராம மக்கள் நிரூபித்துள்ளனர்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications