இந்தியாவிலேயே மிகப்பெரிய உணவு டெலிவெரி சேவை நிறுவனமான சோமேட்டோ-வின் தாய் நிறுவனமான Eternal-ன் சிஇஓ பொறுப்பில் இருந்து வெளியேறிய தீபேந்தர் கோயல் டெம்பிள் என்ற ஹெல்த் டெக் வியரிபிள் நிறுவனத்தை உருவாக்கினார்.
நெற்றியில் ஓட்டிக்கொள்ளப்படும் இந்த கருவியானது மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தைக் கண்காணிக்கும் கருவியாகும்.

இந்த கருவியைப் பல மாத முயற்சிக்குப் பின்பு தயாராகியிருக்கும் நிலையில், இக்கருவிக்கான புக்கிங் வருகிற நவம்பர் 1ஆம் தேதி சந்தையில் அறிமுகமாக உள்ளது. இந்த கருவி மனித மூளையின் செயல்பாடுகளைத் தீவிரமாகக் கண்காணிக்கும் என்பதால் சந்தையில் இக்கருவிக்கு பெரும் வரவேற்பு கட்டாயம் ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று தீபேந்தர் கோயல் தனது டிவிட்டர் பக்கத்தில் Dark.ai என்றும்- from the house of Eternal என்றும்,விரைவில் வரப்போவதாகத் தெரிவித்தார். மேலும் தனது எக்ஸ் பதிவில் கம்பியூட்டர், லேப்டாப்-ல் DARK- BY ETERNAL என்ற லோகோ-வையும் வெளியிட்டு உள்ளார்.
உலகமே ஏஐ பக்கம் சுற்றிக்கொண்டு இருக்கும் போது இந்தியா மட்டும் ஏஐ பிரிவில் பெரிய முன்னேற்றத்தையோ, புதிய கண்டுபிடிப்பு, சேவைகளையோ உருவாக்காமல் இருப்பதாக நீண்ட காலமாகக் கருத்து நிலவி வந்த நிலையில் ஸ்டார்ட்அப் துறையில் பெரும் ஜாம்பவானாக இருக்கும் தீபேந்தர் கோயல் ஏஐ துறையில் DARK என்ற பெயரில் இறங்க உள்ளார்.
மேலும் இது ஏஐ-க்கான புதிய நுகர்வோர் செயலியா அல்லது நிறுவனங்களுக்கான செயலியா அல்லது ETERNAL நிறுவனத்திற்கான உள் நிர்வாக தளம் என்பது குறித்து விபரத்தை வெளியிடவில்லை.
தீபேந்தர் கோயல் ETERNAL நிறுவனத்தின் தினசரி நிர்வாக பணிகளில் இருந்து வெளியேறி வந்திருந்தாலும் தொடர்ந்து இந்நிறுவனத்தின் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து வருகிறார். இதனால் தீபேந்தர் கோயல் ETERNAL நிறுவனத்தின் கீழ் புதிதாக ஒரு சேவையை dark.ai பெயரிலும், இணையத்தின் வாயிலாகவும் அறிமுகம் செய்ய உள்ளது உறுதியாகியுள்ளது.
இன்று காலாண்டு முடிவுகளை வெளியிட்ட ETERNAL நிறுவனம் கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் 92 சதவீதம் அதிக லாபத்தைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே செப்டம்பர் காலாண்டில் வெறும் 65 கோடியை லாபமாகப் பெற்ற இந்நிறுவனம் தற்போது 125 கோடி ரூபாயை லாபமாகப் பெற்றுள்ளது. இன்றைய வர்த்தக முடிவில் ETERNAL நிறுவனப் பங்குகள் 3.5 சதவீதம் குறைந்து 308.8 ரூபாயாகக் குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications

