மருதி சுசூகி முதல் ஹூண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் வரையில் இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பாளர்கள் அனைவரும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் மாதம் ஒரு எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தும் முக்கியமான இலக்கை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கின்றனர்.
இதனால் பர்சனல் வாகன போக்குவரத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள் முக்கியப் பங்காற்றும் என உறுதியாகியுள்ளது. இதனால் சந்தையில் முக்கியமான சில மாற்றங்கள் நடைபெறவும் வாய்ப்பு உள்ளது, இது புதிதாக கார் வாங்குவோருக்கு பெரிய அளவில் பலன் அளிக்கவும் வாய்ப்பு உள்ளது.

அதிகப்படியான எலக்ட்ரிக் கார்கள் சந்தையில் அறிமுகமாகும் பட்சத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையிலான எலக்ட்ரிக் கார் தேர்வுகள் மக்களுக்கு கிடைக்கும், இதனால் கார்களின் விற்பனையில் போட்டி உருவாகி விலை குறையும் குறித்த நுகர்வோர் எதிர்ப்பைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கின்றன.
இதன் படி இந்தியாவில் தற்போது மிகவும் பிரபலமான ஹூண்டாய் கிரெட்டா மற்றும் மருதி சுசூகி கிராண்ட் விட்டாரா போன்ற கார்கள் இருக்கும் மிட்-எஸ்யூவி செக்மண்டில் புதிய எலக்ட்ரிக் கார்களில் அதிகபட்சமாக 12 மாடல்கள் அறிமுகமாகவுள்ளன.
இதேபோல் மேலும், சப்-காம்பெக்ட் பிரிவிலும், காம்பேக்ட் பிரிவிலும், பிரீமியம் எஸ்யூவி பிரிவுகளில் 6 எஸ்யூவி கார்கள் அறிமுகமாகவுள்ளன. அதேபோல், ஹேட்ச்பேக் பிரிவிலும் எண்ட்ரி மற்றும் பிரீமியம் பிரிவுகளில் தலா ஒரு எலக்ட்ரிக் காரும், பிரீமியம் எலக்ட்ரிக் செடானும், எம்பிவி பிரிவில் ஒரு எலக்ட்ரிக் காரும் அடுத்த 2 வருடத்தில் அறிமுகமாகவுள்ளன.
தற்போது ஆட்டோமொபைல் சந்தையில் ரூ.30 லட்சம் வரையிலான விலையில் ஆறு எலக்ட்ரிக் கார்கள் மட்டுமே கிடைக்கின்றன. இதனால், மலிவு விலையிலான எலக்ட்ரிக் கார்களைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கு தேர்வுகள் மிகவும் குறைவாக உள்ளது.
இந்த புதிய எலக்ட்ரிக் கார் அறிமுகங்களின் மூலம், 2030 ஆம் ஆண்டிற்குள் எலக்ட்ரிக் கார் விற்பனை பத்து மடங்குக்கும் அதிகமாகி ஆண்டுக்கு 10-1.5 மில்லியன் யூனிட்டுகளுக்கு மேல் விற்பனை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2023 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 83,000 எலக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டன.
2025 நிதியாண்டில் மருதி சுசூகி ஈவிஎக்ஸ், டாடா கர்வ், கியா ஈவி9 மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி ஈ8 உள்ளிட்ட 10 எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்த கார் தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர்.
இந்தியாவில் பயணிகள் வாகன பிரிவில் எலக்ட்ரிக் வாகனங்களின் (EV) பயன்பாடு குறைந்த அளவிலான வேகத்திலேயே உயர்ந்து வருகிறது. எலக்ட்ரிக் வாகனங்களுக்கு தற்போது குறைவான ஜிஎஸ்டி வரி விதிப்பு இருக்கும் வேளையில் எலக்ட்ரிக் வாகன விற்பனை 2.2% மட்டுமே உள்ளது. இத்தகைய நிலைக்கு என்ன காரணம்..?
எலக்ட்ரிக் வாகன விற்பனையில் மந்தநிலை நிலவ முக்கியமாக மூன்று காரணங்கள் உள்ளன: அதிகப்படியான விலை (எலக்ட்ரிக் வாகனங்கள் பொதுவாக பெட்ரோல் கார்களை விட 1.35-1.7 மடங்கு அதிக விலை கொண்டவை), சார்ஜிங் கட்டமைப்பு இல்லாததால் வாங்குபவர்களிடையே ஏற்படும் பயம் (range anxiety) மற்றும் இந்த பிரிவில் குறைவான எண்ணிக்கையிலான மலிவு மாடல்கள் கிடைப்பது.
தற்போது உலகளவில் பேட்டரி விலைகள் குறைந்து, மேலும் பல மாடல்கள் அறிமுகமாகி, பயண தூரம் குறித்த கவலை (range anxiety) குறையும்போது, எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும்" என்று மருதி சுசூகியின் மார்கெட்டிங் மற்றும் விற்பனை துறையின் மூத்த நிர்வாக அதிகாரி சஷாங்க் ஸ்ரீவஸ்தவா கூறினார்.
மேலும், சில ஆராய்ச்சிகள் கூறிகையில், எலக்ட்ரிக் வாகனங்கள் 5% அளவிற்கு பயன்படுத்தப்படும் போது, இதில் விரைவான வளர்ச்சி இருக்கும் எனக் காட்டுகிறது. 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன பயன்பாடு 20% அளவீட்டை சுற்றி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications