சாமானிய மக்களிடம் நமக்கென குடியிருக்க ஒரு சொந்தமாக வீடு கட்ட வேண்டும் அல்லது வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். மறுபுறம் சிலர் தங்களது உபரி பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய விரும்புவார்கள். வீடு வாங்குவது அல்லது ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதை சரியான காலத்தில் செய்தால் அதிகப்படியான ஆதாயங்களை பெறலாம்.
சரியான நேரத்தை எப்படி கண்டுபிடிப்பது என்று நீங்கள் ரொம்ப யோசிக்க வேண்டாம். வீடு வாங்க அல்லது ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய பண்டிகை காலம் ஒரு அற்புதமான நேரம்.

ஏனென்றால் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் டெவலப்பர்கள் உங்களுக்கு தரகு தள்ளுபடிகள், பத்திர பதிவு தொடர்பான சில ஆதாயங்கள், நிறுத்த கட்டணம் மற்றும் இலவச கார் பார்க்கிங் போன்ற சலுகைகளை வழங்க வாய்ப்புள்ளது.
டெவலப்பர்கள் அளிக்கும் சலுகைகள் காரணமாக கணிசமான பணத்தை சேமிக்கலாம் அல்லது அதே பணத்தில் கூடுதல் வசதிகளையும் பெற முடியும். அதோடு, டெவலப்பர்களிடம் பேரம் பேசி ஒரு நல்ல பிளாட் அல்லது வீட்டை வாங்க இந்த பண்டிகை காலம் பொருத்தமானது. அடுத்ததாக பண்டிகை காலத்தில் குறைந்த வட்டி விகிதத்தில் வங்கி கடன்கள் வாங்கும் வாய்ப்பு உங்களுக்கு உள்ளது.
பண்டிகை காலத்தில் வங்கிகள் தங்களது வருவாயை அதிகரிக்கும் நோக்கில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கில் கவர்ச்சிக்கரமான வட்டி விகிதத்தில் வங்கி கடன்களை வழங்குகின்றன. மேலும் வங்கிகள் பிராசசிங் கட்டணத்தை திரும்ப பெறுதல் போன்ற சலுகைகளையும் வழங்குகின்றன. இந்த சலுகைகள் மூலம் கணிசமான பணத்தை சேமிக்க முடியும்.
பொதுவாக பண்டிகை காலத்தில் கூடுதல் பணம் இருக்கும். தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் கிடைக்கும். உங்கள் கையில் கூடுதல் பணம் இருக்கும்போது ஒரு வீட்டை வாங்குவது எளிதானது மற்றும் அந்த பணம் ஒரு நல்ல விஷயத்திற்கு பயன்படுத்தப்படும். எனவே இந்த பண்டிகை காலத்தில் உங்கள் கையில் கூடுதல் பணம் இருந்தால் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய தயங்காதீர்கள்.


Click it and Unblock the Notifications