இந்திய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு ஜூலை 12 ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இவர் தன்னுடன் படித்த தோழி ராதிகா மெர்சன்ட்டை மணக்கிறார்.
இவர்களின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் குஜராத்தில் களைகட்டியுள்ளன. நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சர்வதேச அளவில் பிரபலமான பாப் பாடகி ரிஹான்னா இந்தியா வருகை தந்திருக்கிறார்.

3 நாட்களுக்கு விழாக்கோலம்: குஜராத்தின் ஜாம்நகரில் முகேஷ் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்டின் திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகள் மார்ச் 1 முதல் 3ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகின்றன. இதற்காக குஜராத் மாநிலத்தின் ஜாம் நகரே விழாக்கோலம் பூண்டுள்ளது.
இந்திய திரை நட்சத்திரங்கள் தொடங்கி ஹாலிவுட் வரை ஏராளமான கலைஞர்கள் இதில் பங்கேற்க இருக்கின்றனர். உலக மகா கோடீஸ்வரர்கள், தொழிலதிபர்கள், சாதனையாளர்கள், அரசியலின் டாப் தலைவர்கள் என நூற்றுக்கணக்கானோர் கொண்டாட்டத்தில் பங்கேற்கின்றனர்.
ஜாம் நகரில் குவியும் பிரபலங்கள்: சர்வதேச நிகழ்வுகளுக்கு எந்த வித குறைவும் இல்லாமல் ஜாம் நகரில் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. ஜாம் நகர் வண்ண விளக்குகளால் மின்னுகிறது. எனவே உலகமே உற்று நோக்கும் நிகழ்வாக இது மாறி இருக்கிறது.
ரிஹான்னா குழு இந்தியா வருகை: உலக புகழ் பெற்ற பாப் பாடகியான ரிஹான்னா, இந்த விழாவில் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் முதல் முறையாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். குஜராத் விமான நிலையத்தில் ரிஹான்னாவின் குழுவினருக்கு குஜராத்தின் பாரம்பரிய தாண்டியா நடனத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் பாரம்பரிய இனிப்புகள் வழங்கப்பட்டன. திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகளின் ஒரு பகுதியாக ரிஹான்னா மேடை ஏற உள்ளார்.
பில் கேட்ஸ், மார்க் ஸக்கர்பர்க் வருகை: ரிஹான்னாவை போலவே பஞ்சாபி சென்சேஷனான தில்ஜித் தோஸாஞ் மேடை ஏறி பாட இருக்கிறார். இதனால் விழா மேலும் களைகட்ட உள்ளது. கலைஞர்கள் தவிர பில் கேட்ஸ், சுந்தர் பிச்சை போன்ற பிரபலங்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர். பேஸ்புக் நிறுவனம் மார்க் ஸக்கர்பர்கும் இதில் பங்கேற்க குஜராத் வருகை தந்துள்ளார்.
இந்த விழாவில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்களுக்கு டிரெஸ் கோட், பார்ட்டி தீம் ஆகியவை அறிவுறுத்தப்பட்டுள்ளன. திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகள் மூன்று நாட்களுக்கு நடைபெறுகின்றன. இந்த நிகழ்ச்சியில் ஷாருக்கான் நடனமாடுகிறார். இதற்கு அவர் ஜாம் நகர் சென்று விழா ஏற்பாடுகளை பார்வையிட்டார்.
ரிலையன்ஸ் இண்டர்ஸ்டிரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி , நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த அம்பானிக்கும் , என்கோர் ஹெல்த்கேர் நிறுவன தலைமை செயல் அதிகாரி வைரென் மெர்சென்டின் மகள் ராதிகா மெர்சென்டிற்கும் ஜூலை மாதம் திருமணம் நடைபெற உள்ளது.
தனது இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் என்பதால் இதனை விழாவை விமரிசையாக செய்ய முகேஷ் அம்பானியும் நீடா அம்பானியும் முடிவு செய்துள்ளனர்.
Story Written by: devika


Click it and Unblock the Notifications