யூடியூப்-ல் என்ன செய்துவிட முடியும்..? எத்தனை பேர் வெற்றி அடைய முடியும்..? எவ்வளவு சம்பாதித்து விட முடியும்..? என்ற கேள்வி தற்போது மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது, இதற்கு முக்கியமான காரணம் யூடியூப், இன்ஸ்டா மூலம் பிரபலமானவர்களின் எண்ணிக்கை தற்போது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதனால் கேள்விகளும் அதிகரித்துள்ளது.
ஒரு ஸ்மார்ட்போனும், திறமை இருந்தால் போதும் உங்களுக்கான வாழ்க்கையை, வளர்ச்சியை நீங்கள் தீர்மானிக்க முடியும் வாய்ப்பை இந்த டிஜிட்டல் தளங்கள் உருவாக்கியுள்ளது தான் இதன் வெற்றி.
இந்த நிலையில் வெறும் 26 வயதில் ஜப்பான் நாட்டின் இளம் பில்லியனராக உருவெடுத்துள்ளார் யூடியூபர் Riku Tazumi.
யூடியூபர்கள்
உலக நாடுகளில் இருக்கும் யூடியூபர்கள் வேறு, ஜப்பான் நாட்டில் இருக்கும் யூடியூபர்கள் மொத்தமாக வேறு. ஜப்பான் நாட்டின் யூடியூபர்க்ள் பெறும்பலானவர்கள் லைவ் ஸ்ட்ரீம் செய்பவர்கள், அதிலும் குறிப்பாக விர்ச்சுவல் கேரக்டர்களைக் கொண்டு லைவ் ஸ்ட்ரீம் செய்பவர்கள்.
ஜப்பான் யூடியூபர்கள்
இதை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட வர்த்தகம், திறமையாளர்களின் ஏஜென்சியை உருவாக்கிய Riku Tazumi இன்று ஜப்பான் நாட்டின் இளம் பில்லியனராக உருவெடுத்துள்ளார். 2021 ஆம் ஆண்டு டோக்கியோ நகரத்தை சேர்ந்த 21 வயதான Riku Tazumi என்பவர் Ichikara என்னும் நிறுவனத்தை உருவாக்கினார்.
விர்ச்சுவல் யூடியூபர்கள்
ஜப்பான் நாட்டில் வெற்றிகரமாக இருக்கும் விர்ச்சுவல் யூடியூபர்கள் அதாவது அனிமேட்டெட் உருவங்களைக் கொண்டு லைவ் ஸ்ட்ரீம் செய்யும் யூடியூபர்களை ஒன்றாக இணைக்கும் ஏஜென்சியை உருவாக்கி வெற்றிகரமான பொழுதுபோக்கு நிறுவனமாக மாற்றினார்.
Riku Tazumi நிறுவனம்
Ichikara நிறுவனத்தின் வர்த்தக மாடல் பெரிய அளவிலான தாக்கத்தையும், வருமானத்தையும் யூடியூபர்கள் மத்தியில் உருவாக்கியது. இதன் வாயிலாக வேகமாக வளர்ச்சி அடையத் துவங்கிய பங்குச்சந்தையில் இறங்க முடிவு செய்தது. இதனால் Ichikara என்ற பெயரை Anycolor Inc என்று மாற்றியது.
டோக்கியோ ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்
2022 ஜூன் மாதம் டோக்கியோ ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்-ல் பட்டியலிடப்பட்ட Anycolor Inc ஐபிஓ வெளியிட்டு சுமார் 8 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. சுமாப் 370 பில்லியன் யென் அதாவது 2.5 பில்லியன் டாலராக மதிப்பிடப்படும் நிறுவனத்தில் 45 சதவீத பங்குகளை வைத்துள்ளார் Riku Tazumi.
1.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு
இதன் மூலம் Riku Tazumi சொத்து மதிப்பு 1.1 பில்லியன் டாலராக உயர்ந்து ஜப்பான் நாட்டின் இளம் யூடியூப் பில்லியனர் என்ற பெயரை எடுத்துள்ளார். அமெரிக்க டாலருக்கு எதிரான ஜப்பான் யென் மதிப்பு பல தசாப்தங்களுக்குக் குறைவாக உள்ள போதும், ரெசிஷன் அச்சம் அதிகமாக உள்ள போதிலும் Riku Tazumi உருவாக்கிய Anycolor Inc நிறுவனம் 8 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications