இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 46வது வருடாந்திர பங்குதாரர்கள் கூட்டம் திட்டமிட்டபடி 2 மணிக்கு சரியாக துவங்கியது. இந்த கூட்டம் வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக நடப்பதாக முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
இந்தியாவில் நடக்கும் ஜி20 மாநாட்டையும் அதன் மூலம் ஏற்பட்ட உள்ள உலகளாவிய மாற்றங்களையும், தாக்கத்தையும் எதிர்நோக்கி காத்திருப்பதாக தெரிவித்தார் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

இந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 46வது வருடாந்திர பங்குதாரர்கள் கூட்டம் பங்குதாரர்களிடம் முகேஷ் அம்பானி இந்த ஆண்டு மொத்த லாபமாக 73,670 கோடி ரூபாயும், நிறுவனத்தின் ஏற்றுமதி மதிப்பு 3.4 லட்சம் கோடி ரூபாய் அளவீட்டை தொட்டு 33.4 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளதாக தெரிவித்தார் முகேஷ் அம்பானி.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடந்த நிதியாண்டில் 1.77 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தக்ததை உருவாக்கி இதில் நேரடி மற்றும் மறைமுக வரியாக 16,639 கோடி ரூபாய் செலுத்தியுள்ளதாக தெரிவித்தார் முகேஷ் அம்பானி. சிஎஸ்ஆர் பிரிவில் மட்டும் 1,271 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக தெரிவித்தார் முகேஷ் அம்பானி.

2023 ஆம் நிதியாண்டில் மட்டும் 2.6 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 3.9 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்திய அளவில் வருவாய், லாபம், ஏற்றுமதி, சந்தை மதிப்பு, ஆகியவற்றில் முன்னணி நிறுவனமாக ரிலையன்ஸ் உள்ளது என முகேஷ் அம்பானி தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications