இந்திய முதலீட்டாளர்களின் திருவிழாவாக விளங்கும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் வருடாந்திர கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் கடந்த ஒரு வருடத்தில் ரிலையன்ஸ் குழுமத்தின் பங்கு, வருவாய், லாபம் வளர்ச்சிகள் குறித்துப் பேசப்படுவது மட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து அறிவிக்கப்படும்.
இந்நிலையில் ஜூன் 24ஆம் தேதி மதியம் 2 மணிக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் வருடாந்திர கூட்டம் நடைபெற உள்ளது.
ரிலையன்ஸ் குழும வருடாந்திர கூட்ட
ரிலையன்ஸ் குழும வருடாந்திர கூட்டத்தின் முன்பும் பின்பும் முதலீட்டாளர்களுக்குப் பெரிய லாபத்தை அளித்து வருகிறது. இதனால் தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் வருடாந்திர கூட்டம் மிக முக்கியமானதாக விளங்குகிறது.
உதாரணமாக 2019 கூட்டத்தில் முடிவில் ரிலையன்ஸ் பங்குகள் சுமார் 9.72 சதவீதம் வளர்ச்சி அடைந்து வருகிறது.
5ஜி சேவை திட்டம்
வெள்ளிக்கிழமை நடக்க உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் வருடாந்திர கூட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவை முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 5ஜி சேவை சோதனை செய்து வரும் ரிலையன்ஸ் ஜியோ இக்கூட்டத்தில் 5ஜி சேவை அறிமுக நாள் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏர்டெல், வோடபோன் ஐடியா அறிவிப்புகள்
இந்நிலையில் ஜியோவின் அறிவிப்பு முன்னதாகவே ஏர்டெல் டாடா உடனும், வோடபோன் ஐடியா - சிஸ்கோ நிறுவனத்துடன் 5ஜி சேவைக்காகக் கூட்டணி சேர உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் நாளை ரிலையன்ஸ் ஜியோ-வின் அறிவிப்பின் தாக்கத்தைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூகிள், ஜியோ பட்ஜெட் ஸ்மார்ட்போன்
ரிலையன்ஸ் ஜியோவும் கூகுள் நிறுவனம் இணைந்து இந்தியாவில் மலிவு விலையில் ஸ்மார்ட்போன்-ஐ அறிமுகம் செய்யத் திட்டமிட்டு, அதற்கான பணிகள் முடிந்துள்ள நிலையில், 50 டாலர் அதாவது 4000 ரூபாய்க்குக் கீழ் உருவாக்கப்பட்டு உள்ள இந்தப் பட்ஜெட் ஸ்மார்ட்போன் குறித்து அறிவிப்பு வெளியாக அதிகளவிலான வாய்ப்பு உள்ளது.
முக்கிய அறிவிப்புகள் வரலாம்
இதைத் தாண்டி கூட்டத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் சில முக்கிய அறிவிப்புகளின் பட்டியல்
1. சவுதி ஆராம்கோ உடன் 20 சதவீத பங்கு விற்பனை திட்டம்
2. ஜியோ IoT பிளாட்பர்ம் அறிமுகம் செய்யப்படலாம். இதன் மூலம் 20000 கோடி ரூபாய் அளவிலான வர்த்தகத்தைப் பெற முடியும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
3. ஜியோ பைபர் மற்றும் ஜியோ செட் டாப் பாக்ஸ் அறிமுகம்
4. ஜியோ சேவையை மேம்படுத்த 14 நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளது முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.
5. ஜியோ - மைக்ரோசாப்ட் நீண்ட கூட்டணி குறித்த திட்டம் விரிவாக்கம்
டெலிகாம் கட்டணம்
டெலிகாம் கட்டணம் உயர்வு
இக்கூட்டத்தில் டெலிகாம் சேவையின் கட்டண உயர்வு குறித்த அறிவிப்போ அல்லது அதற்கான சிக்னல்-ஓ கட்டாயம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஜியோ வாடிக்கையாளர்களுக்குச் சோகமாக விஷயமாக இருந்தாலும் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications