நாட்டில் கொரோனாவின் தாக்கம் மக்களை ஆட்டிப் படைத்து வரும் நிலையில், மறுபுறம் முகேஷ் அம்பானியின் அசுர வளர்ச்சி கடந்த சில மாதங்களாகவே காண முடிகிறது.
ஏனெனில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியாக செய்யப்பட்ட அடுத்தடுத்த முதலீடுகளின் காரணமாக, ரிலையன்ஸ் நிறுவனம் கடனில்லா நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
இதோடு இன்னும் அந்த நிறுவனத்தின் சில்லறை வர்த்தகத்தில் அமேசான் முதலீடு செய்யப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மிகப்பெரிய எனர்ஜி நிறுவனம்
இது மட்டும் இத்தகைய சாதகமான விஷயங்களினால் பங்கு சந்தையிலும் நல்ல ஏற்றம் கண்டு வருகிறது. இந்த நிலையில் ஆசியாவின் பணக்காரரான முகேஷ் அம்பானியின் கட்டுப்பாட்டில் இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், எக்ஸான்மொபில் நிறுவனத்தினை விஞ்சியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தில் சவுதி அராம்கோ நிறுவனம் முதலீடு செய்த பின்பு, சவுதி அராம்கோவுக்கு அடுத்தபடியாக மிகர்பெரிய எனர்ஜி நிறுவனமாக உருவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிகரிக்கும் முதலீடு
ஏனெனில் இந்த நிறுவனத்தின் தொலைத் தொடர்பு வணிகம் மற்றும் சில்லறை வணிகங்களில் முதலீடுகள் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், இந்த நிறுவனத்தில் பல பெரும் முதலீட்டாளர்கள் குவிந்துள்ளனர். மிகப்பெரிய சுத்திகரிப்பு வளாகத்தினை நிர்வகிக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை வெள்ளிக்கிழமையன்று 4.3% அதிகரித்துள்ளது. அதன் சந்தை மதிப்பில் கடந்த வெள்ளிக்கிழமையன்று 8 பில்லியன் டாலர்களை சேர்த்து, இதோடு 189 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.
எக்ஸான்மொபில் நிறுவனம் இழப்பு
அதே எக்ஸான்மொபில் நிறுவனம் அதன் சந்தை மதிப்பில் 1 பில்லியன் டாலர்களை இழந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. ஏனெனில் உலகளவில் கொரோனாவின் தாக்கத்தினால் எரிபொருள் தேவையானது குறைந்தது. இந்த நிலையில் தான் எக்ஸான்மொபில் நிறுவனம் போராடியது. இந்த நிலையில் தான் எக்ஸான்மொபில் பங்கு விலை 39% பங்கு விலை சரிந்துள்ளது. ஆனால் இதே காலத்தில் ரிலையன்ஸ் பங்கு விலையானது 43% அதிகரித்துள்ளது.
சவுதி அராம்கோ முதலிடம்
உலகின் எண்ணெய் ஜாம்பவான் ஆன சவுதி அராம்கோ நிறுவனம் 1.76 டிரில்லியன் டாலர் மதிப்புடன் உலகின் மிகப்பெரிய எனர்ஜி நிறுவனமாக உள்ளது. கடந்த மார்ச் 31வுடன் முடவடைந்த ஆண்டில் ரிலையன்ஸின் வருவாயில், 80% பங்கு வகிக்கும் எரிசக்தி வணிகம் கொண்டுள்ளது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் டிஜிட்டல் வணிகம், சில்லறை வணிகம், தொலைத் தொடர்பு என பலவற்றை விரிவுபடுத்துவதற்காக இந்த நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
முக்கிய வணிகம்
அம்பானியின் ஒப்பந்தமானது சமீபத்திய மாதங்களில் கூகுள் முதல் பேஸ்புக் வரை தனது டிஜிட்டல் தளத்தில் முதலீடுகளை செய்து வருகின்றனர். 63 வயதான அதிபர் முகேஷ் அம்பானி தனது தந்தையின் முக்கிய வணிகமாக இருந்த எனர்ஜி வணிகத்தில் இருந்து விலகியே இருக்கிறார்.


Click it and Unblock the Notifications