இன்று உலகம் முழுக்க ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் என்றாலே தனி மதிப்பு தான். சீனாவின் பொருட்கள் விலை ரீதியாக மக்களை கவர்ந்துள்ளது எனில், ஐபோனின் தரத்திற்கு என்றே தனி குழுவே உள்ளது.
விற்பனை ரீதியாக ஆப்பீள் பின்னடைவில் இருந்தாலும், அதன் தரத்தினை அறிந்தவர்களுக்கு நிச்சயம் அது தெரியும். ஏனெனில் தரத்திற்கு என்று தனி மதிப்பு உண்டு அல்லவா?
அமெரிக்க பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட ஆப்பிள் நிறுவனம் அதன் சந்தை மூலதனத்தில் 2 டிரில்லியன் டாலரினை எட்டியுள்ளது. இது உலகின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில் அமெரிக்க பங்கு சந்தையில் ஒரு நிறுவனம் 2 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பினை பெற்றுள்ளது இதுவே பர்ஸ்ட்.
மொத்த சந்தை மூலதனத்திற்கு சமம்
கடந்த 1980ல் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட போது இந்த நிறுவனதின் ஒரு பங்கின் விலையானது 22 டாலர்களாகும். இது அதன் முதலீட்டாளர்களுக்கு பலமடங்கு வருவாயினை கொடுத்துள்ளது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இந்த தொழில்நுட்ப ஜாம்பவானின் சந்தை மூலதனமானது, இந்தியாவில் பிஎஸ்இ-யில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனத்திற்கு சமமாகும்.
சில நாடுகளின் ஜிடிபியை விட அதிகம்
இதே சில தரவுகளின் படி, பிரேசில், ஆஸ்திரேலியா, கனடா, ரஷ்யா, தென் கொரியா, ஸ்பெயின், மெக்ஸிகோ போன்ற நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட இந்த நிறுவனம் அதிக மதிப்புடையது. உலகளாவிய முதலீடு, முதலீட்டாளர்களுக்கு நிலையற்ற தன்மையிலிருந்து பாதுகாக்கவும், வளர்ச்சித் திறனை காட்டும் நிறுவனங்களை தெரிந்து கொள்வதும் முக்கியத்துவம்.
அமெரிக்கா பங்கு சந்தையில் முதலீடு செய்யலாம்
தற்போது ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ், ஆக்ஸிஸ் செக்யூரிட்டீஸ் மற்றும் மாஸ்டர்டிரஸ்ட் போன்ற பல தரகு நிறுவனங்கள், ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் அமெரிக்க பங்கு சந்தையில் முதலீடு செய்ய புதிய தளங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்திய முதலீட்டாளர்கள் தற்போது ஒரு ஐபோனை வைத்திருப்பது மட்டுல் அல்ல, நிறுவனத்தில் பங்குகளை வாங்குவதன் மூலம் ஆப்பிள் வளர்ச்சியின் ஒரு பகுதியாக பின்னாளில் உங்களுக்கு தேவைப்படலாம்.
பல மடங்கு லாபம்
ஆப்பிள் நிறுவனத்தில் 10 வருடங்களுக்கு முன்பு 1000 டாலர் முதலீடு செய்திருந்தால் (இன்றைய இந்திய மதிப்பில் சுமார் 75,000 ரூபாய்), இப்போது அதன் மதிப்பு 12,900 டாலர்களாகும் (இந்திய மதிப்பில் சுமார் 9,50,000 ரூபாயாகும். ஆப்பிள் நிறுவனம் 270 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக வருவாயைக் கொண்டுள்ளது. ஆப்பிளின் மிகப் பிரபலமான பிராண்டான ஐபோன் விற்பனை, அதன் மொத்த விற்பனையில் 50% பங்கு வகித்துள்ளது. இதே அதன் உதிரி பாகங்கள் 22% லாபமும், மேக் ஐஓஎஸ் 10% லாபமும், ஐபாட்கள் 7 - 8% லாபம் வகிக்கின்றன.
இந்திய நிறுவனங்கள் இதன் அருகில் வர முடியுமா?
உண்மையை சொல்லவேண்டுமானால் ஆப்பிளின் சந்தை மதிப்பினை தொட, எந்தவொரு இந்திய நிறுவனமும் பல ஆண்டுகளை எடுத்துக் கொள்ளலாம். நிபுணர்கள் ஆப்பிள் நிறுவனத்திற்கு சிறந்த போட்டியாளர், இந்திய சந்தையில் சிறந்த நிறுவனமாக இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தான் என்கிறார்கள். அதன் சந்தை மதிப்பு தற்போது 13 லட்சம் கோடி அல்லது 180 பில்லியன் டாலர் சந்தை மூலதனத்துடன் பட்டியலிடப்பட்ட மிகப்பெரிய இந்திய நிறுவனமாகும்.
இந்திய நிறுவனங்களின் வளர்ச்சி
ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மூலதனத்தினை எந்தவொரு இந்திய நிறுவனமும் செல்வது கடினம். அப்படி செல்ல வேண்டுமானால், அது உலகளவில் செல்ல வேண்டும். உலகளாவிய அளவில் செல்லாமல் இத்தகைய இருப்பினை எட்டுவது மிக கடினம். இந்திய சந்தைக்கு அப்பால் விரிவடைந்தால் மட்டுமே, இந்திய நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் மணிக்கன்ட்ரோல் செய்திகள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications