வெறும் ரூ.4000ல் ஸ்மார்ட்போன்.. சியோமிக்கு செக் வைக்கத் துடிக்கும் முகேஷ் அம்பானி..!

இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி அடுத்தடுத்த முக்கியத் திட்டங்களைக் கையில் எடுத்து வருகிறார். ஒருபுறம் டெலிகாம் வாடிக்கையாளர்களை வைத்து எப்படி ரிலையன்ஸ்-ன் மற்ற துறையின் வர்த்தகத்தை மேம்படுத்துவது, மறுபுறம் டெலிகாம் துறை சார்ந்த தொழில்நுட்பத்தையும், சேவையையும் எப்படியெல்லாம் மேம்படுத்துவது, அதன் மூலம் எப்படி வர்த்தகத்தை ஈர்ப்பது என்பதில் தெளிவாகச் செயல்பட்டு வருகிறார் முகேஷ் அம்பானி.

இதன் வழியாக டெலிகாம் துறை சார்ந்த வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்கு விரிவாக்கம் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்ட முகேஷ் அம்பானி தற்போது மிகப்பெரிய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்திய சந்தைக்கும், இந்திய மக்களுக்கும் ஏற்ற வகையில் மிகவும் குறைந்த விலையில் ஆண்டுராய்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளார் இந்திய பில்லியனர் முகேஷ் அம்பானி. முகேஷ்-ன் இந்திய முடிவு இந்தியாவில் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் வர்த்தகச் சந்தையைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தும் சியோமி நிறுவனத்திற்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக விளங்குகிறது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் டெலிகாம் சேவை துறையில் புதிய உச்சத்தை அடைந்திருக்கும் நிலையில் 5ஜி தொழில்நுட்பத்தை உருவாக்கவும், அதைப் பிற நாடுகளுக்கு விற்பனை செய்யவும் ஏற்கனவே தனது பணியைத் துவங்கியுள்ள நிலையில், தற்போது ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முக்கிய முடிவை எடுத்துள்ளது.

2 வருடம்

2 வருடம்


ரிலையன்ஸ் இண்ட்ஸ்டரீஸ் ஏற்கனவே மலிவு விலை பியூச்சர் போன்களைத் தனது ஜியோ டெலிகாம் சேவையுடன் இணைந்து விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது ஸ்மார்ட்போன் வர்த்தகச் சந்தையைக் கைப்பற்றும் முயற்சியாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவில் இருக்கும் தனது ஸ்மார்ட்போன் தயாரிப்பு கூட்டணி நிறுவனங்களை அடுத்த 2 வருடத்தில் 20 கோடி மலிவு விலை ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் அளவிற்கு உற்பத்தி தளத்தை மேம்படுத்த அறிவுறுத்தியுள்ளது.

கூகிள்

கூகிள்

ரிலையன்ஸ் ஜியோவில் கூகிள் நிறுவனம் முதலீடு செய்துள்ள நிலையில், இந்த முதலீட்டு கூட்டணியைப் பயன்படுத்தி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆண்டுராய்டு இயங்கு தளத்தில் இயங்கும் ஜியோ போன் இந்தியாவிலேயே தயாரித்து அதை 4000 ரூபாய்க்கு விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாக ரகசிய தகவல் வெளியாகியுள்ளது.

ஜியோ கூட்டணி

ஜியோ கூட்டணி

இந்த மலிவு விலை ஸ்மார்ட்போன்களை, மலிவு விலை ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் சேவை உடன் பேக்கேஜ்-ஆக விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.

இந்தியாவில் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களில் 5ல் ஒரு பங்கு ஸ்மார்ட்போன்கள் 7000 ரூபாய்க்கும் குறைவான ஸ்மார்ட்போன்கள் என்பதால் பியூச்சர் போன்களைப் பயன்படுத்துவோருக்கும், விலை குறைவான ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவோருக்கும் ரிலையன்ஸ்-ன் 4000 ரூபாய் ஸ்மார்ட்போன் மிகப்பெரிய விருப்பமாக இருக்கும்.

 

சியோமி

சியோமி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இந்த 4000 ரூபாய் ஸ்மார்ட்போன் திட்டம், இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் பல்வேறு சீன நிறுவனங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். அதிலும் முக்கியமாகச் சீனாவின் சியோமி நிறுவனத்தின் ஆதிக்கம் ஜியோ ஸ்மார்ட்போன் அறிமுகத்தால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும்.

வீடு தேடி வரும் சியோமி ஸ்டோர்.. புதுப்புது ஐடியாவுடன் சீன நிறுவனம்..!

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+