டெல்லி: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மீது மட்டும் சமீப காலமாக, அதுவும் இந்த லாக்டவுன் காலத்திலும் கூட பண மழையாக பொழிந்து கொண்டுள்ளது எனலாம்.
ஏனெனில் அந்தளவுக்கு நிதிகளை திரட்டி வருகிறது. ஆன்லைன் சில்லறை வர்த்தகத்திலும் தற்போது காலடி எடுத்து வைத்துள்ளது.
இப்படி அடுத்தடுத்த பாதைக்கு சென்று கொண்டு இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி உரிமை பங்கீட்டிலும், 30 ஆண்டுகளில் களமிறங்குவது இதுவே முதல் முறையாகும்.
உரிமை பங்குக்கு விண்ணப்பம்
முகேஷ் அம்பானி தான் எது எடுத்தாலும் தனி காட்டு ராஜவாக வலம் வரும் முகேஷ் அம்பானிக்கு, உரிமை பங்கு வெளியீட்டில் முதலீட்டாளார்களின் ஆதரவும் நன்றாகவே கைகொடுத்துள்ளது எனலாம். கடந்த மே 3ம் தேதியுடன் முடிவடைந்த உரிமை பங்கு வெளியீட்டில் 1.56 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பெரும் அளவிலான கோரிக்கை
ரிலையன்ஸ் நிறுவனம் உரிமை பங்கு வெளியீடு மூலமாக 53,124 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது அது பெரும் அளவிலான கோரிக்கையை பெற்றுள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய உரிமைப் பங்கு வெளியீடாகும்.
பங்கு வழங்கல் எப்போது?
இந்த உரிமை பங்கீட்டின் ஒரு பகுதியாக பொதுப்பகுதி 1.22 முறை விண்ணபித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது ஏற்கனவே இந்த நிறுவனத்தில் பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு இது மேற்கொண்டு வாய்ப்புகளை வழங்குகிறது. இந்த நிலையில் இந்த பங்கு வழங்கல் ஜூன் 10 அன்று அல்லது அதற்குள் நடக்கலாம் என்றும் தெரிகிறது.
பங்கு சந்தையில் எப்போது பட்டியல்
மேலும் இந்த பங்குகள் ஜூன் 12 அன்று பிஎஸ்இ மற்றும் என்எஸ்இயில் பட்டியலிடப்படும் என்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது. இந்த உரிமை பங்கு வெளியீட்டில் பங்கேற்றுள்ள வாடிக்கையாளர்களால், இன்று இந்தியாவின் பெருமை வாய்ந்த அடையாளமாக அமைந்த எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் மற்றும் பங்குதாரர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் மீதுள்ள நம்பிக்கை
அதிலும் நாடு முழுவதிலும் கொரோனா பரவல் காரணமாக முடங்கியுள்ள நிலையிலும், இந்த உரிமை பங்கீட்டில் இந்தளவுக்கு வெற்றி கண்டிருப்பது, உள்நாட்டு முதலீட்டாளர்கள், சிறு முதலீட்டாளர்கள், சில்லறை பங்கு தாரர்கள் நிறுவனத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது என்று முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications